சத்திநாயனார்:
சோழநாட்டின் வரிஞ்சையூரில், வேளாளர் குடியில் தோன்றியவர் இவர். அன்றைய வரிஞ்சியூர் இன்று இரிஞ்சியூர் என அழைக்கப்படுகிறது! இவ்வூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.
இவரது பூசைநாள்: ஐப்பசி பூசம்.
காவிரிபாயும் சோழவளநாட்டின் வளம் நிறைந்த ஊர் வரிஞ்சையூர். களை என நினைத்து உழவர்கள் பறித்த தாமரையிலிருந்து வழியும் தேன் குளத்தினை நிரப்பச்செய்யும் அளவிற்கு வளமுடையது இவ்வூர்.இத்தகைய வளமுடைய ஊரில் பிறந்நவர் சத்தி நாயனார். ஆடல்வல்லானின் திருவடியை நாள்முழுவதும் சிந்தை செய்யும் இயல்புடையவர் சத்தியர்.
[அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
வைத்த நாவை வலித்து அரி சத்தியால்
சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்]
தம் தலைவனாகிய ஈசனையும், அவர்தம் அடியாரையும் எவரேனும் இகழ்ந்து பேசினால் பேசியவரின் நாவினை அறுப்பதே தம் நெறியாய் கொண்டு வாழ்ந்து வந்தார். அவ்வாறு தீங்கு சொல்வார் நாவினை அப்போதே அரிவதற்காகவே தன் கையில் எப்போதும் தண்டாயம் எனும் நாவினை இழுக்கும் தன்மையுடைய குறடு எனும் கருவியையும், வலிந்து அரிவதற்கு கத்தியையும் கையிலேயே வைத்திருப்பார். இச்செயல்களினாலேயே அன்று சுற்றுவட்டாரத்தில் அவர் பிரபலாமியிருந்தார்.
இவ்வாறு ஆண்மை நிறைந்த திருப்பணிகள் பல ஆண்டு செய்து வந்த சத்தியார், இறைவனின் துணை கொண்டு வாழ்ந்து வந்தார். இறைவன் மீது ஐயமற்ற பக்தி கொண்ட காரணத்தால், இவ்வரிய தொண்டாற்றி வந்த சத்தியார், இறுதியாய் ஈசன் திருவடி நிழலை அடைந்தார்.
“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#சத்திநாயனார்
#நாற்பத்துநான்காம்நாள்
No comments:
Post a Comment