Thursday, 14 May 2020

ஐயடிகள் காடவர்கோன்

தினம் ஒரு அடியார் -45

ஐயடிகள் காடவர்கோன்:

தொண்டைமண்டலத்தின் தலைநகரான காஞ்சியில் பல்லவர் குலத்தில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: ஐப்பசி மூலம்
அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முற்ப்பட்ட நாயன்மார் இவர். இவர் சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்து, தலம் ஒன்றிற்கு ஓர் வெண்பா வீதம் பாடினார். அந்நூல் 'ஷேத்ர வெண்பா" எனப்படுகிறது. அதில் தற்போது நமக்கு 24 வெண்பாக்களே கிடைத்துள்ளது. எஞ்சியவைகள் பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நூல் மூலம் நமக்கு அறியப்பெறும் பழமையான தலங்கள்:
1.தில்லை 2.குடந்தை 3.திருவையாறு 4.திருவாரூர் 5.திருத்துருத்தி 6.திருக்கோடிக்கா 7.பாண்டவாய்த்தென்இடைவாய் 8.திருநெடுங்களம் 9.குழித்தண்டலை(குளித்தலை) 10.திருவானைக்கா 11.மயிலாப்பூர் 12.உஞ்சேணை மாகாளம் 13.வளைகுளம் 14.சாய்க்காடு 15.திருப்பாச்சிலா சிராமம் 16.சிராமலை(திருச்சிராப்பள்ளி) 17.திருமழப்பாடி 18.திரு ஆப்பாடி 19.காஞ்சிபுரம் 20.திருப்பனந்தாள் 21.திருவொற்றியூர் 22.திருக்கடவூர் 23.திருக்கடவூர் மயானம் 
முதலியனவாம் இவரது காலம் ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.

பாரில் சிறந்த சான்றோர் நிறைந்த காஞ்சியை சைவத்திருநெறிப்படி, ஆட்சிசெய்து நீதிவழுவா ஆட்சிசெலுத்தி வந்தார். சிற்றரசர் எல்லாம் தன் ஏவல்கேட்டு நிற்கவும், வடதென் கலைகள் ஒருங்கே வளரவும் அரசாட்சி நடத்தி வந்தார். சிவத்தாருத்தொண்டினை தம் வாழ்நாள் நெறியாகவும், கடமையாகவும் போற்றி வந்தார். சிவபெருமான் எழுந்தருளிய ஆலயங்களெல்லாம் கண்டுகளிக்க விருப்பம் கொண்டார். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஓர் பாடல் வீதம் பாடினார். நால்வர் பாடிய பாடல்பெற்ற மற்றும் வைப்புத்தலங்கள் குறைந்தது 300 இருக்கும்.  நிச்சயம் காடவர்கோன் இவ்வனைத்து தலங்களை கண்டு களித்து, பாடல் இயற்றியிருப்பார். அவ்வகையில், பெரும்பற்றப்புலியூர்  இறைவனது திருக்கூத்தினை நேரில் கண்டு விருப்பமுடன் ஒரு வெண்பாவை மகிழ்வுடன்  இயற்றினார்.

[இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 
 பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
 கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார்]

இவ்வகை நெறியாலே சிவனடியார்கள் இன்பம் அடையுமாறு தமக்கு இறைஇசைத்த பணிகளை, நீண்டகாலமாய் செய்து வந்து, மதில்சூழ்ந்த காஞ்சியில் அரசாற்றி வந்த ஐயடிகள் காடவர்கோன் இறைவனுடைய திருவடிநிழனின்கீழ் சிவபுரத்தில் வழிவழி நிற்கும் அன்பர்கள் சூழ அவர்களுடன் கலந்தார்.

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#ஐயரடிகள்காடவர்கோன்
#நாற்பத்துஐந்தாம்நாள்


No comments:

Post a Comment

Popular Posts In This Blog