தினம் ஒரு அடியார்-01
திருத்தொண்டர் புராணம்:
ஈசன் ஒருவரே,அவரை பலமுறைகளில் வணங்கும் வழக்கம் நம் பாரததேசத்தில் இருந்தது! காளாமுகம், காபாலிகம்,பாசுபதம்,மாவிரதம் என பலவகைகள் உண்டு, இவர்கள் உடலில் சாம்பல்தரித்தும்,கழுத்து, மார்பு, தோள்களில் சிவலிங்க இலட்சினையையும் சூடுவர், மனித கபால மண்டையோடுகளில் கையேந்தி இரைந்து உண்பர். சிவபெருமானுடன் அவரது கணங்களையும், பேய்களையும் இணைத்து வணங்குபவர்கள். உயிர்பலியிடும் முறையும் மேலோங்கியிருந்தது. நம் தமிழகத்தில் இவ்வழிபாட்டு முறை ஆங்காங்கே இருந்தாலும், இதன் தீவிர கொள்கைகளால் இங்கேநிலைபெறவில்லை. கி.பி 5ம் நூற்றாண்டின் இறுதியில் பக்திஇயக்கங்கள் தோன்றியது. நாயன்மார்களின் வரலாற்றை உற்று நோக்கினால், உயிர்பலியிடும் முறைக்கு எதிராய் கிளைத்த மார்க்கமாய் தோன்றுவதை உணரலாம். 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் பக்திமார்க்கத்தை அசுரவேகத்தில் வளர்த்தார். அறிவே தேவையில்லை இறைவனை அடைய என்றால் அது "மூடபக்தி",எனவே "அளவுக்கு மிஞ்சி ஆராயாதே" எனும் புதுகருத்தினை புகுத்தினார்.அதன்பின் சுந்தரர் காலத்தில் பக்தி இயக்கம் புதுஉச்சம் பெற்றது.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் கி.பி12ம் நூற்றாண்டில் தோன்றி சோழப்பேரரசன் இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சராயிருந்து அதன்பின் சிதம்பரத்தில் தங்கி பெரியபுராணம் எனும், "திருத்தொண்டர் புராணம்"இயற்றியவர் சேக்கிழார். இதனை இயற்றுவற்கு ஊன்றுகோலாய் அன்றைய அரசியல் சூழலோ? பக்தியோ? எதுவாயிருப்பினும், அவருக்கு மூன்று நூற்றாண்டு முன்னர் சுந்தரர் வெவ்வேறு பகுதிகளைச்சேர்ந்த அறுபது அடியார்கள் குறித்து பாடிய சுவடி ஒருங்கால் கண்ணில் பட்டிருக்கலாம். எனவே அவ்வருபது அடியார்களின் ஊரிற்கு நேரில் சென்று அன்றைய சூழலுடன், பழைய பதிகத்தின் சூழலையும் பொருத்தி பெரியபுராணத்தை உருவாக்குகிறார்.
இனிவரும் நாட்களில் தினமும் நாயன்மார் ஒருவரின் வரலாற்றினை காண்போம்.
1.திருநீலகண்டர்:
இவரது இயற்பெயர் இன்னதென அறியவில்லை.தில்லையிலே குயவர் குலத்தில் தோன்றியவர் நீலகண்டர். அவர் மண்பாண்டம்,திருவோடு செய்து சிவனடியார்களுக்கு கொடுக்கும்போது நீலகண்டம் எனச் சொல்லித் திருவோடு வழங்குவது வழக்கம், ஆகவே இக்காரணபெயரே நிலைத்துவிட்டது.ஈசனின் பக்தனாக இருந்த நீலகண்டர் சிற்றின்பத்தில் மிகவும் விருப்பம் கொண்டவராவார். பரத்தையின்பால் பற்று கொண்டவர். இதை அறிந்த அவரது மனைவி மனம் வருந்தினாள். அவள் கணவரிடம் கோபம் கொண்டாள்.ஒருநாள் இரவு நீலகண்டர், மனைவியின் ஊடலை நீக்கி கூடச் சென்றார். மனைவி பொறுமை இழந்தாள்.ஐயனே! இனி எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே ஆணையிட்டு, தம்மை தீண்டக் கூடாது என்று கூறிவிட்டாள். நீலகண்டத்தையே உயிராகவும், உணர்வாகவும் கொண்டிருந்த அடியார் என்றுமில்லாமல் மனைவி, இவ்வாறு ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டு உளம்பதறி, நிலை தடுமாறித் திடுக்கிட்டுப் போனார்.தலைவியின் சொல்லிலுள்ள பொருளைச் சற்றே எண்ணிப் பார்க்கலானர். என்மனைவி மட்டுமல்ல பிற மகளிரையும் மனதால் கூட தீண்டமாட்டேன் என்று சிவனார் மீது ஆணையிட்டார் நீலகண்டர். அன்று முதல் தீருநீலகண்டர் முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலனையும் அடக்கி வாழலானார்.
ஆண்டுகள் பல உருண்டன. நீலகண்டரும், அவரது மனைவியாரும்
முதுமைப் பருவத்தை எய்தினர். சிவபெருமான், நீலகண்டரின் பெருமையையும் திறத்தையும் உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார். அதற்காக தமது கோலத்தை மாற்றிக் கொண்டார். பக்தனிடம் திருவிளையாடலைத் தொடங்கினார்.
அடியார் கோலத்தில் வந்த ஈசன் நீலகண்டரின் வீட்டிற்கு வந்து, இது அதிசய திருவோடு எனவே பத்திரமாய் பார்த்துகொள், பின்னர் வாங்கிக்கொள்கிறேன் என கூறி சென்றார். ஆனால் வீட்டினுள் வைத்த திருவோட்டினை தொலைத்துவிட்டார் நீலகண்டர். பின் அடியார் வேடத்தில் வந்த ஈசர் அதனை கேட்க,
அடியவரிடம் நீங்கள் கொடுத்த ஓட்டைக் காணவில்லை அதற்கு மாறாக வேறு ஓடு தருகிறேன் ஏன்றார். அப்படியென்றால் நான் கூறுவது உண்மை என உன் புதல்வன்மேல் சத்தியம் செய் என்றார் அடியார். ஐயா தாங்கள் சொல்லியவாறு உறுதி செய்ய எனக்கு புத்திரப் பாக்யமில்லை என்றார். அப்படியானால் உன் அன்பு மனைவியின் கையைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார். அடியவரே எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சபதத்தால் என் மனைவியை தீண்டி உடன் மூழ்க முடியாது. நான் வேண்டுமானால் தனியே மூழ்கி உறுதி செய்கிறேன் என்றார். இதை ஏற்காத அடியவர் வழக்கு மன்றம் சென்றார்.
அடியவர் தான் ஒடு கொடுத்தது. நீலகண்டர் அது காணாமற் போய்விட்டது என சொல்லியதால் மகன் அல்லது மனைவி உடன் சத்தியம் செய்யச் சொன்னது அதற்கு அவர் கூறும் காரணம் ஆகியவற்றைக் கூறினார். நடுவர்கள் நீலகண்டரின் வாக்கு மூலம் கேட்டனர். வைத்த இடத்திலிருந்து ஓடு காணாமற்போனது மாயமாய் உள்ளது என்ற நீலகண்டரிடம் நடுவர்கள் உன்மனைவியின் கரம் பிடித்து குளத்தில் மூழ்குவதுதான் முறை எனத் தீர்ப்பளித்தனர்.
அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும்போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர்.
‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.
இதுவே நீலகண்டர் வரலாறு.
#திருநீலகண்டர்
#அறுபத்துமூவர்
#முதல்அடியார்
#தினம்ஒருஅடிகள்

நல்ல முயற்சி பார்த்தி....
ReplyDeleteவாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி
DeleteAstonishing...
ReplyDeleteThank you
Deleteமாப்ள நல்ல முயற்சி😍
ReplyDeleteஇன்னும் நீளட்டும் உனது இலட்சிய பயணம்
உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் சகோ
ReplyDeleteதொடரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பார்த்தி.
ReplyDeleteமிக நல்ல முயற்சி நண்பரே!! இளைய தலைமுறையினருக்கு இத்தகவல்கள் நற் சிந்தனையையும் நல்லொழுக்கத்தையும் அவசியம் மேம்படுத்தும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙌🙌🎉🎉🎉
ReplyDelete