Monday, 18 May 2020

முனையடுவார் நாயனார்

தினம் ஒரு அடியார்-50

முனையடுவார் நாயனார்:

வளவர் ஆண்ட பொன்னிவளநாடு மணம்மிக்க மலர்ச்சோலைகள் நிறைந்தது. அந்த மலர்களிலிருந்து வடியும் தேன் ஆற்றில் கலந்தோடும், அந்த ஆற்றுநீரை கொண்டு உழவர்கள் உழவுத்தொழில் புரிவதாதால் அம்மக்களின் வயலில் தேனும், நீரும் கலந்து மகிழ்வான புதுவகை மணம் பரவும். அத்தகைய சிறப்பான பழம்பதி "நீடூர்". இந்த நீடூரில் வேளாளர் குடியில் தோன்றியவர் முனையடுவார் நாயனார்.
இவரது பூசைநாள் : பங்குனி பூசம்.
வயல்களின் உரிமயாளர்களான வேளான்குடியினரின் தலைவர் இவர். ஈசனின் திருவடிகளையே நாள்தோறும் சிந்தித்து, திருத்தொண்டு ஆற்றி வந்தார். இவர் போர்த்தொழில் புரிந்து வந்ததை பெரியபுராணம் வாயிலாய் அறியலாம்.பகைவரை வென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஈசனின் அடியாருக்கு நாள்தோறும் அறம் செய்து வந்தார். அதுமட்டுன்றி எந்த மன்னனாவது போரில் ஈடுபட்டு தோற்றபின், தன்னிடம் வந்து பெருநிதியை தந்து போர்புரிய சொன்னால் அதனை பெற்றுகொண்டு போர்வல்லமையுடன், வெற்றி பெற்று கொடுப்பார். அத்தொகையினையும் அடியாருக்கு செலவழிப்பார்.

பலவழிகளில் பெற்ற பணம் யாவையும் அடியார்கள் கேட்ட அளவில் கொடுத்து மகிழ்வார். அடியார்களுக்கு நல்ல உணவும், கறி, நெய், தயிர், பால் என சிறந்த உணவுகளை படைப்பார். இதனை ஒரு நெறியாய் ஏற்று தவறாமல் செய்து வந்தார். இவ்வாறாய் பலகாலமாய் இந்நெறியை விடாமல் பின்பற்றியதால், ஈசனின் பெருங்கருணை பெற்று தம் உலகத்தில் நிலைத்திருக்க செய்தார் சிவபெருமான். வாழ்நாள் முழுவதும் போர்ச்செயலில் ஈடுபட்டதால் இவர் "முனையடுவார்" என பெயர் பெற்றார்.

"அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#முனையடுவார்நாயனார்
#ஐம்பதாம்நாள்

No comments:

Post a Comment

Popular Posts In This Blog