தினம் ஒரு அடியார்-58
நேச நாயனார்:
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள ஊர் கம்பிலி, அன்று இந்த ஊர் காம்பீலி என அழைக்கப்பட்டது. அன்பும், வாய்மையும் ஒருங்கே அமைக்கப்பட்டது இவ்வூர்.மலைமேகங்கள் வந்து விரும்பி தழுவும் உயரத்தில் மாடமாளிகைகள் நிரைந்த ஊர் இது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊரில் அறுவையர்(சாலியர்) குலத்தில் தோன்றியவர் நேச நாயனார். கன்னடத்தில் இவரை நைசபக்தரு என அழைக்கின்றனர்.
இவரது பூசைநாள் : பங்குனி ரோகினி
தம் குலத்தொழிலில் மேம்பட்ட நிலையை அடைந்தாலும், ஈசனின் திருவடிகளை தம் தலையினில் போற்றும் தன்மையராய் விளங்கினார். தாம் தொழிலில் ஈடுபடும்பொழுது தன் செயலை சிவனாரின் திருவடியில் வைத்து அதன்மூலம் எழும் வாக்கினை "திருவைந்தெழுத்தாக" ஓதியபடி செய்து முடிப்பப்பார்.
"நமசிவாய" எனும் மந்திரமே திருவைந்தெழுத்து எனப்படும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
திருவைந்தெழுத்தினை 5ஐந்து வடிவங்களாகக் கொள்கின்றனர். அவை
தூல பஞ்சாட்சரம் =நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் =சிவயநம
ஆதி பஞ்சாட்சரம் = சிவயசிவ
காரண பஞ்சாட்சரம் = சிவசிவ
ஏக பஞ்சாட்சரம் = சி
அவ்வகையில் முடிக்கப்பட்ட கைத்தொழிலின் பயனாக உடை, கீள் மற்றும் புதியகோவணம் ஆகியவற்றை செய்து முடிப்பார். அவ்வாறு நெய்த உடைகளை சிவனடியார்களுக்கு வாரி வழங்கி வந்தார். இவ்வாறான இறைத்தொண்டினை இடைவிடாது செய்துவந்த நேசனார் சிவபெருமானின் திருவருளால் அவரது திருவடிநிழலை அடையும் பெரும்பேறு பெற்றார்.
“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#நேசநாயனார்
#ஐம்பத்துஎட்டாம்நாள்
No comments:
Post a Comment