Tuesday, 26 May 2020

மங்கையற்கரசியார்

தினம் ஒரு அடியார்-57

மங்கையற்கரசியார்:

மங்கையற் இனத்திற்கே தனனி அரசியாய் விளங்கும் தகுதியுடையவர், சோழர் குலத்திற்கே கொழுந்து போன்றவர். தென்வன் குலமான பாண்டியர் குலத்திற்கு ஏற்ப்பட்ட பழியினை போக்கிய தெய்வீகம் பொருந்திய பெண்ணரசியாவார். தெய்வீக குழந்தையான ஞானசம்பந்தரின் திருவருள் துணைசெய்ய. தமிழ்நாடு அடைந்த துயரினை போற்றியவர். 

[எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே ]

பொதுவாக தமிழக முன்னாள் முதல்வர் திரு.அண்ணா அவர்கள்தான் நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயர் வைத்ததாய் ஓர் கருத்துண்டு. ஆனால் 12ம் நூற்றாண்டளவிலேயே முதன்முதலாய் சேக்கிழார் பிரான் "தமிழ்நாடு" என்று பதிவு செய்கிறார்.

சோழநாட்டின் பழையாறையில் தோன்றிய்வர் இவர். இவரது தந்தையார் மணிமுடிசோழனாவார். 
இவரது பூசைநாள்: சித்திரை ரோகினி
அரிகேசி பாண்டியரின் மனைவியாதலால் இவரது காலம் கி.பி 7ம்நூற்றாண்டாகும்.
சமணநெறி தழைத்தோங்கிய பாண்டியமண்ணில், அரிகேசி பாண்டியனுக்கு மனைவியாய், பாண்டிய மண்ணின் அரசியாய் வீற்றிருந்து, தம் கணவருக்கு ஏற்ப்பட்ட கொடிய வெப்புநோயினை, சம்பந்தர் பிரானின் அருளால் அந்நோயை நீக்கி, பாண்டிய மண்ணில் சைவநெறி தழைத்தோங்க செய்தவர். குற்றமற்ற அம்மன்னனுடையே சேர்ந்து ஈசனின் திருவடி நிழலை அடைந்தவர்.

"வரிவளையாள் மானிக்கும் அடியேன்"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியயேய் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#மங்கையற்கரசிநாயனார்
#ஐம்பத்துஏழாம்நாள்

No comments:

Post a Comment

Popular Posts In This Blog