தினம் ஒரு அடியார் 39
புகழ்ச்சோழ நாயனார்:
முடியுடை மூவேந்தரில் பார்புகழும் சோழகுலத்தில் உதித்த சிவப்பழம் இவர்.
இவரது பூசைநாள் : ஆடிகிருத்திகை
[குலகிரியின் கொடுமுடிமேல் கொடி
வேங்கைக் குறி எழுதி
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு
நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ்ச்
சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம்
உள் உறையூராம் உறையூர்]
இமயத்தின் உச்சியில் தன்குலச்சின்னமான புலிச்சின்னத்தை பொறித்து, குளிர்நிலவு போன்ற தண்ணிய வெண்குடையின் கீழ், நெடிதான இந்நிலஉலகத்தினை காத்து புகழடைந்த வளம்மிக்க சோழர்களின் மூதூரான, அழகுகளுக்கெல்லாம் உள்ளுறையாக விளங்கும் தன்மையுடைய பழம்பதியாய் விளங்கியது உறையூர், அளவற்ற பெருஞ்சிறப்பு வாய்ந்தது. பல்கிய ஒளியினை தரவல்ல மணிகளை கொண்டு இழைக்கப்பட்ட மாடமாளிகைகள் வான்வரை உயர்ந்ததாக வீதியின் இருமருங்கிலும் காணப்படும். நகரைச்சுற்றிலும் காணப்படும் மதில்களின் இடையே மலர்கள் நிறைந்த அகழிகள் இருக்கும்.
(அன்றைய உறையூர் எவ்வளவு வளம் பொருந்தியது என நினைக்கையில், இன்று கான்கிரிட் காடான அந்நகரின் நினைவு வந்துவிடுகிறது, உறையூர் இன்று திருச்சிமாவட்டத்தின் முக்கிய நகர். தமிழகசங்ககாலம் தொடங்கி 13 ம் நூற்றாண்டு வரை சோழர்களின் முக்கியநகராய் இருந்தது உறையூர். உறையூர், உறந்தை, கோழியூர் என பல பெயர்களில் வழங்கி வந்தது இந்நகர். கி.மு.முதல் நூற்றாண்டை சேர்ந்த பெரிப்ளஸின் நூல் உறையூரை அருகரு என குறிக்கிறது. அகநானூறு, புறநானூறு இரண்டும் உறையூர் அக்காலத்தில் கோட்டை, கொத்தளங்களுடன் சிறப்பாய் இருந்ததாய் கூறுகிறது.
1964ம் ஆண்டு T.V.மகாலிங்கம் தலைமையில் சென்னைப்பல்கலைக்கழக தொல்லியல்துறையால் 1968 ம் ஆண்டு வரை அகழாய்வு மேற்க்கொள்ளப்பட்டது. நிறைய தமிழி எழுத்துக்கள் நிரம்பிய பானையோடுகள், குடியிருப்புகள், கண்டறியப்பட்டது. அக்காலகட்டத்திலே உறையூர் திருச்சியின் முக்கியநகர்.
இன்று அகழாய்வு மேற்கொள்ளவே முடியாதவாறு முற்றிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துவிட்டது. தொல்லியல்துறை அகழாய்வு செய்ததால் சங்ககால கட்டடத்தின் எச்சமும், பானைகளில் தமிழி கல்வெட்டுகளும் கிடைத்தது. இன்று ஆய்வுசெய்ய இயலாவண்ணம் சுற்றிலும் கட்டடம் சூழ்ந்துவிட்டது. இன்றும் நகரில் ஆங்காங்கே கட்டிடம் கட்ட அடித்தளம் தோண்டுகையில் சங்ககால பொருட்கள் நிறைய கிடைத்த வண்ணம் உள்ளது)
இத்தகைய சிறப்புடைய நகரத்தை தலைநகராய் கொண்டு ஆண்டுவந்தார் அநபாயசோழரின்(இரண்டாம் குலோத்துங்கன்) மரபில் முன்னோராய் வந்த பெருமையுடைய, "பொன்னிநதி புரவ லன்" என சிறப்புபெயர் பெற்ற புகழ்ச்சோழனார். பெருமலைபோன்ற தோள்வலிமையுடையவர் இவர். இவரின் வலிமையை கண்டு அஞ்சி பிறதேச மன்னர்கள் பாதம் பணிந்தனர். வைதீகமும், சைவமும் தலைக்க செங்கோல்நெறிப்படி ஆட்சி செலுத்தி வந்தார். இவரின் காலம் 5-6ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது. புகழ்ச்சோழர் கொங்கு நாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள மற்ற நாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் தமது தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றி கொண்டார். அங்கே இறைவன் உறையும் திருவாநிலை கோவிலை வந்தடைந்தார்! அங்கிருந்து அரண்மனைக்கு சென்றார். இந்நிலையில் சிவகாமி எனும் அடியாரை துன்புறுத்திய யானையை எறிபத்தர் எனும் வீரநாயன்மார் ஒருவர் வெட்டி வீழ்தினார். அவரைதண்டிக்க படையெழுப்பி வந்த புகழ்ச்சோழர், தன் வீரர்களை கொன்றவரை தானே கொல்ல முன்னோக்கி வர அவர் சிவனடியார் என்ற உண்மை தெரியவர, எறிபத்தரின் தலையில் தன் உடைவாளை தந்துநின்று, திருத்தொண்டிலே மிகவும் சிறப்புற விளங்கினார்,
இக்கதையை விரிவாய் காண (https://m.facebook.com/story.php?story_fbid=3111705772225758&id=100001590970336)
எம்பெருமானின் அருளால் நல்முறையில் ஆட்சிப்புரிந்து வந்து கொண்டிருந்த புகழ்ச்சோழர் மீண்டும் சோதனைகள் ஏற்படத் துவங்கியது. தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அரசர்கள் அனைவருக்கும் கப்பம் விதிக்கப்பட்டது. அரசர்கள் கப்பமாக கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப்பொருட்களை எல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்களின் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் நல்லமுறையில் புரிந்து வருமாறு பணிந்தார். இவ்விதமாக எண்ணற்ற மன்னர்கள் கப்பம் செலுத்தி வரும் வகையில் அதிகன்(அதியர் எனும் வேளிர் மரபினராய் இருத்தல் கூடும்) என்னும் அரசன் மட்டும் மன்னருக்கு கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் கப்பம் செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டார். கடுங்கோபங்கொண்ட புகழ்ச்சோழர் கடல்போன்ற தன்படையை அதிகன் மீது ஏவினார். புகழ்ச்சோழனின் படைமுன் நிற்கமுடியாத அதிகன் படைகள் அழிவுற்றன. வழியெங்கும் அதிகனின் பாதுகாப்பு அரணை துவம்சம் செய்தனர். கொடிகள் சூழ்ந்த மதிலையுடைய பொறையூரை அழித்தனர். தன் நகரை விட்டு இருண்ட காட்டினுள் ஒளிந்தான். நகரின் உள்ளேபுகுந்த வீரர்கள் தம் விருப்பம்போல் அந்நகரின் மங்கைகளையும், யானைகளையும், குதிரைகளையும் கைப்பற்றினர். ஒவ்வொரு வீரனும் தம் மன்னனிடம் வீரத்தைபறைசாற்ற எதிரிகளின் பல தலைகளை தூக்கிக்கொண்டு கருவூர் நோக்கி விரைந்து மன்னரின் முன்பு வெற்றிக்களைப்பில் அடுக்கி காட்டினர்.தமது படை வீரர்களின் வீரம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த மன்னர் கண்ணில் ஒரு தலையில் மட்டும் சடைமுடி இருப்பது தென்பட்டது. அந்த தலையை கண்டதும் அவர் கொண்ட மகிழ்ச்சியானது நொடி பொழுதில் காணாமல் போனது, ஒருகனம் ஆடிப்போனார்.வருத்தம் கொண்டார். எனது ஆணையானது அடியார்களுக்கு தீங்கிழைக்கும் படி ஆனதே என்று அழுது மனம் ஆற்றியவர் அமைச்சரிடம் என் ஆட்சியில் சைவ நெறிக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே. திருமுடியில் சடைமுடி ஏந்திய அடியாரை நானே கொன்றுவிட காரணமாகிவிட்டேனே. எம்பெருமானுக்கு எத்தகைய தீங்கை யாம் செய்துவிட்டோம்! இனி நான் வாழ்ந்து பயனில்லையென, இனி வெற்றித்திருமுடியை என் மகனுக்கு சூட்டுவீராக! என கூறிவிட்டு பிணக்குவியலில் தான் கண்ட அடியவரின் தலையை கையில் ஏந்தியவாறே! செந்தீ வளர்க்க ஆணையிட்டு, அடர்ந்து எழுந்த தீயில் மகிழ்ச்சியாய் உள்நுழைந்தார்.
அவர் தீயினுள் உட்புக, அடுத்த கனம் வானுலகிலிருந்து பூமழை பூமியெங்கும் பரவியது! மங்கல இசைக்கருவிகள் பெருமுழக்கம் செய்தது.ஈசனின் திருவடியில் இன்பநிலையில் நிரந்தரமாய் அமர்ந்தார் புகழ்ச்சோழர்.
"பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#புகழ்ச்சோழநாயனார்
#முப்பத்துஒன்பதாம்நாள்

No comments:
Post a Comment