தினம் ஒரு அடியார்-37
கணநாத நாயனார்:
சோழநாட்டு சீர்காழியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் இவர்.
இவர் பூசைநாள்: பங்குனி திருவாதிரை
சீர்காழியின் அந்தணர் குலத்தின் தலைவர் இவர். சீர்காழி திருத்தோணியப்பர் கோவிலுக்கு வரும் அடியார்களை, அவர்தம் தகுதி, தேவை அறிந்து அவருக்கு வசதியும், அறிவுரையும் செய்வதையே தொண்டாய் வழக்கமாய் செய்து வந்தார். அவ்வகையில் நந்தவனத்தில் பணிபுரிவோர், திருமஞ்சனநீர் எடுத்து வருவோர், நந்தாவிளக்கு எரிப்போர், கோவிலில் திருமுறைகள் வாசிப்போர் (அக்காலத்தில் திருமுறை ஓதுவதற்கு பிடாரர்களை நியமித்திருப்பதை இதன் வாயிலாக அறியலாம்) என கோவிலில் பணிபுரியும் உவச்சர்களுக்கு அவரவர் தேவையறிந்து அவர்கள் இன்பம் அடையும் வண்ணம் தொண்டாற்றுவார்.
சீர்காழியில் அவதரித்த உமையின் திருமுலைப்பாலை அருந்திய தெய்வக்குழந்தையான சம்பந்தரின் திருவடி மீது பேரன்பு கொண்டிருந்தார். ர். ஞானசம்பந்தப் பெருமானை நாளும் வழிபட்ட நலத்தால், கொன்றைமலரை விரும்பி அணியும் சிவபெருமான் உறையும் கயிலைமலையில், சிவகணங்களுக்கு தலைவராய் வழிவழியாய் இருந்துவரும் பெருஞ்சிறப்பினை அடைந்தார்.
“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#கணநாதநாயனார்
#முப்பத்துஏழாம்நாள்

No comments:
Post a Comment