தினம் ஒரு அடியார்:34
சாக்கிய நாயனார்:
திருச்சங்கமங்கையில் வேளாண்மரபில் தோன்றியவர் இவர். சாக்கியம் எனப்பட்ட பௌத்த மதத்தினை பின்பற்றியவர், இவரது இயற்பெயர் தெறியவில்லை.
இவரது பூசைநாள்: மார்கழி பூராடம்
இவர் பிறந்த திருச்சங்கமங்கை காஞ்சிபுரம் அருகேயுள்ளது என பொதுவாய் அனுமானிக்கப்படுகிறது. வழக்கமாய் சேக்கிழார் அனைத்து அடியார்களைப்பற்றி கூறும்போது முதலில் அவரது நாட்டைப்பற்றி குறிப்பிட்டு அவ்வூரின் வளமைகளை கூறுவார். ஆனால் சாக்கியரின் ஊரைப்பற்றி குறிப்பிடுகையில் அவரது நாடு பற்றி எந்த தகவலும் கூறாமல் விட்டுவிட்டார். ஆகவே அவரது முக்திதலமாய் கூறப்பட்ட காஞ்சி கோனேரிகுப்பம் அருகேயுள்ள வீரட்டானேஸ்வரரை கணக்கில் கொண்டு பொதுவாக காஞ்சியில்தான் தோன்றினார் என்று கருதுகின்றனர். சங்க+மங்கை, சங்கம் என்பது, புத்தம், தம்மம், சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. பௌத்த பிக்குகளுக்குச் சங்கம் என்று பெயர். எனவே சங்கம் மங்கை என்கிற பெயர் அவ்வூருக்கு வந்திருக்கலாம்.அக்காலத்தில் காஞ்சியில் பௌத்தகாஞ்சி என்ற பெரிய ஊர்இருந்தது. சாக்கியர் எனும் பௌத்தரும் நிரம்ப காஞ்சியில் இருந்தனர். ஆகவே அன்றைய பௌத்தகாஞ்சி பகுதியிலே சாக்கியர் தோன்றியிருக்கலாம்.
மெய்ஞானம் பெறவேண்டி சாக்கியர்களின் அரிய (திரிபிடகம்)கலைநூல்களை கற்றபின், தான்இருந்த சமயநெறியை விட உயர்ந்தது சைவநெறியே என உணர்ந்தார். ஆனால் பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் அன்று இருந்தமையால் வெளிப்படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமல்போயிற்று, இவரின் காலத்தில் சைவத்தை விட பௌத்தம் செல்வாக்காய் இருந்தது தெரியவருகிறது, எனவே இவர் நிச்சயம் பக்திமார்க்கம் வலுப்பெற்றிருந்த 7 ம் நூற்றாண்டிற்கு முன் தோன்றியவர் என கருதலாம்.
இவர் சாக்கியவேடம் கலையாமலே ஈசன்மேல் அன்பு கொண்டார். உயர்வான இறைவனின் அருட்குறியை கண்டு வணங்கிய பின்னரே உணவு உண்ணவேண்டும் என்பதனை வழக்கமாய் கொள்ள வேண்டும் என நினைத்தார். இதனை மற்ற சாக்கியர் பார்த்தால் தம்மை உண்டுஇல்லை என பண்ணிவிடுவர், என்ன செய்வதென யோசித்து, பக்தி மிகுதியால், கீழே கிடந்த சிறுகல்லை பூவாக எண்ணி வீசியெறிந்தார். இதனைகண்ட பிற சாக்கியர் சிவலிங்கத்தை ஓர் சாக்கியர் கல்லால் எறிகிறார், என எண்ணி அகமகிழ்ந்தனர்.
தன்குழந்தையை தூக்கிமகிழும் பெற்றோரை, குழந்தை அறியாது தாக்கி அதனால் காயம் உண்டாகினால், பெற்றோர் எவ்வாறு இன்முகத்துடன் காயத்தை மறைத்து மகிழ்வாரோ, அதேபோல் சாக்கியரின் கல்லெறிபூஜையை மகிழ்வுடன் ஏற்றார் ஈசர். தொடர்ந்து கல்லெறிந்ததால் ஈசன்மேனியில் வடு உண்டாயிற்று. அதனைகண்ட சாக்கியர், ஈசன் தன்பூஜையை மகிழ்வுடன் ஏற்றதாய் கருதினார். அதேசமயம் சாக்கியர் எவரும் தன்சிவபக்தியை அறியா வண்ணமும் பார்த்துக்கொண்டார். அன்பினால் விளைந்த இச்செயலை, இதற்கு முன்னர் நாம் கண்ணப்பநாயனாரில் வாயிலாய் கண்டோம். ஈசனை வணங்குவதற்கு ஆகமங்கள் ஏதும் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபனம் செய்தவர்கள் இவ்விருஅடியார்கள்.பௌத்தராகிய சாக்கிய நாயனார் சைவம் ஏற்று, நாளும் ஒரு கல் எடுத்து எறிந்து சிவனை வழிபட்டார் என்பது காஞ்சி சமய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு நிகழ்வாகும். சாக்கியரின் இத்தொண்டினை உலகறியச்செய்ய ஈசன் எண்ணினார். ஒருநாள் சாக்கியர் கல்எறிதல் நிகழ்ச்சியை மறந்து உணவருந்தினார், அதன் பின்னரே அவருக்கு உணர்வு வந்து விரைவாய் ஈசனைநோக்கி ஓடினார்.அங்கே தன் பிறவிப்பிணியை நீக்கும் கல் ஒன்றை எடுத்து எறிந்தார். அப்போது தன்இணையுடன் காளை வாகனத்தில் வானில் தோன்ளினார் ஈசர். மகிழ்ச்சி பொங்கும் வண்ணம் மண்ணில் விழுந்து வணங்கினார் சாக்கியர்.தன்திருவடிப்பேற்றை சாக்கியருக்கு வழங்கி மறைந்தார் ஈசர்.
"வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#சாக்கியநாயனார்
#முப்பத்துநான்காம்நாள்

No comments:
Post a Comment