தினம் ஒரு அடிகள்-31
தண்டியடிகள் நாயனார்:
"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே" என்று அப்பர் திருவாரூர் கமலாலய குளத்தை கூறுவார் அப்பர். அப்புனித குளத்தினை தூய்மை செய்யும்பேறு பெற்றவர் தண்டியடிகள். பிறந்தாலே முக்தி என்று கருதக்கூடிய சோழநாட்டின் திருவாரூரிலே பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: பங்குனி சதயம்
இவர் செங்குந்தர் மரபில் தோன்றியவர். பிறவியிலேயே கண்பார்வை இழந்த இவர், தன் அகக்கண்களால் ஈசனுக்கு ஓர் உரு கொடுத்து, அவ்வுருவத்தை மனதில் எண்ணி போற்றி வந்தார். நமசிவாய எனும் மந்திரத்தையே நாளும் போற்றிவந்தார். திருவாரூரின் புண்ணியகுளமான கமலாலய குளம், அருகேயுள்ள சமணரின் பாழிகளாய் ஆக்கித் தூர்க்கப்பட்ட இடத்தில் குறைபாடு உண்டாயிற்று. அன்பினால் நான் இந்த குளத்தை அகலாமாய் பெருகும்படி தோண்டிட வேண்டும் எனும் உள்ளத்துணிவுடன் அதனை மேற்கொண்டார். திருக்குளத்தினுள்ளே ஒருதறி நட்டு, அதிலே கயிறு கட்டி, கரையிலும் தறி நட்டு, அக்கயிற்றினுனியை அதனில் இசையக் கட்டி, மண்வெட்டியையும் கூடையையும் எடுத்து, அக்கயிற்றைத் தடவிக் கொண்டு சென்று, மண்ணைக் கல்லிக் கூடையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கயிற்றைத் தடவிப் போய்க் கரையிலே போடுவார் இப்படித் தினந்தோறும் மிகுந்த விருப்பத்துடன் மண்ணை மேலே கொட்டினார். இதனைகண்டு மனம்பொறுக்காத சமணர், மண்ணை தோண்டாதீர், அவ்வாறு தோண்டினால் அதிலுள்ள உயிர்கள் இறக்கும் என வாதிட்டனர். அழுக்குபடிந்த முடைநாற்றமுடைய சமணர்(சேக்கிழார் அவ்வாறே கூறுகிறார்)சொன்ன மாற்றத்தை கேட்டு அதற்கு எதிர்மொழியாய், சிவனுக்குரிய திருப்பணிகள் எவையாயினும் அவை எல்லாமே குற்றம் அல்ல, நல்அறமே என்றார். அதற்கு மறுமொழியளித்த சமணர், அவரது ஊனத்தை கிண்டல் செய்து, "நாங்கள் கூறியதை ஏற்காவிடின் உனக்கு கண்ணுடன் சேர்ந்து காதும் கேளாமல் போய்விடும்" என்றனர். அதற்கு தண்டியடிகள், "என்அகக்கண்ணால் மேருமலையான வில்லினால் முப்புரங்களை எரித்த ஈசனை காண்பேன், அதுதவிர மற்றது எதுவும் எனக்குபிழையே! என் ஈசன் அருளால் உம்மைப்போல் புறவிஷயங்களை காணும் பொருட்டு கண்பார்வை அடைந்தால் என்ன செய்வீர்?" என எதிர்கேள்வி கேட்டார்.
சமணர்கள் "நீ உன் கடவுளின் அருளினால் கண்பெற்றுவிட்டால், நாங்கள் இவ்வூரில் இருக்கமாட்டோம்" என்று சொல்லி, அவருடைய மண்வெட்டியைப் பறித்துக் குறித்தறிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். சமணரின் இக்கொடுஞ்செயலால், ஆற்றாமையும் கொடுஞ்சினமும் ஏற்ப்பட்டது தண்டியடிகளுக்கு, கண்ணீர்மல்க ஈசனை வேண்டினார், "எம்பெருமானே சமேணர் வலியவந்து என்னை கொடுஞ்சொல்லால் அவமானபடுத்தினர், நீவிர் இவ்வெளியோனுக்கு அருளவேண்டும்" என வேண்டினார். அன்று இறைவனுக்கு செய்யும்பணி தடைபட்டு வருத்தத்துடன் உறங்க மடம்புகுந்தார். மனவருத்தத்துடன் உறங்கினார். உடனே ஈசன் அகக்கண்ணில் தோன்றி,
[நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்]
மனதில் நீ கொண்ட கவலையை ஒழி! உன் கண்களை விழித்துப்பார்! அந்தச்சமணர் தம் கண்கள் மறையும்படி நீ காண்பாய்!அஞ்சவேண்டா என கூறி மறைந்தார். அன்றே சோழமன்னன்
கனவிலும் தோன்றி நடந்ததைக்கூறி தண்டியடிகளின் கருத்தை முடிப்பாயாக என அருளினார்! விழித்தெழுந்த மன்னனும்,தண்டியடிகள் மடத்திற்கு சென்று தான் கண்ட கனவினை கூற, தண்டியடிகளும் முதல்நாள் நடந்த நிகழ்வினையும் தான் கண்ட கனவினையும் கூறி, தகுந்த நீதி வழங்க வேண்டினார். மன்னனும் இறைவன் கூறியபடி நடந்து காட்டுவீராக என ஆணையிட, தண்டியடிகள் கமலாலய குளத்தில் ஈசனை நினைத்து மூழ்கினார், அனைவரும் வியக்கும்வண்ணம் கண்பார்வை பெற்றார். சமணர்களோ பார்வையிழந்து தடுமாறினார்கள். சோழமன்னன் உடனே, சமணர் அனைவரையும் திருவாரூர் நகரைவிட்டு விலக ஆணையிட்டார். சமணர்களின் பள்ளியையும், பாழிகளையும் இடித்து நொருக்கினார். பாழடைந்த கமலாலய குளத்தினை தூர்வாரி, ஆழப்படுத்தினார்.கரையை ஆக்கிரமித்த இடங்களை அப்புறப்படுத்தி கரையை உறுதியாக்கினார். அகக்கண்ணுடன் வாழ்ந்து ஈசன்அருளால் புறக்கண்ணையும் பெற்ற தண்டியடிகள் மண்ணில் நிலைபெற வாழ்ந்து இறைவன் திருவடிஅடைந்தார்.
“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்”
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#தண்டியடிகள்நாயனார்
#முப்பத்தொன்றாம்நாள்

No comments:
Post a Comment