தினம் ஒரு அடியார்-30
திருமூலர்:
பத்தாவது திருமுறையான திருமந்திரமாலையினை திருவாவடுதுறையிலிருந்து அருளியவர் இவர். இவரது இயற்பெயர் மூலன்.
அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில் இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். கும்பகோணம்-திருவாவடுதுறை சாலையிலுள்ள சாத்தனூரில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: ஐப்பசி அஸ்வினி.
இவரது காலம் குறித்து நிறைய முரண்பாடுகள் உண்டு. சிவபெருமானை உருவழிபாடற்று வணங்கும் நிலையிலிருந்தபோதே இவர் வாழ்ந்ததாய் கூறுவர். இவரது பாடல்கள் எழுத்துநடை பிற்காலத்தியதாய் தோன்றினாலும், அவை பின்னால் கிடைத்ததை தொகுத்து கூறியதே எனும் கருத்தும் உண்டு. இவரது வரலாறு அகத்தியரோடு இணைத்து கூறப்படுகிறது. அகத்தியரே துவரைப்பகுதியிலிருந்து பதினெட்டு வேளிர்களை அழைத்து வருவதாக சங்ககாலபுலவர் கபிலர் கூறுவார். இதிலிருந்து அகத்தியரின் தொன்மையையும், அவரை சந்தித்த திருமூலரின் தொன்மையையும் அறியலாம். அப்படியில்லையாயின் அகத்தியர் பலர் இருந்திருக்கலாம்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270
இந்த ஒருபாடலே திருமூலரின் உயரிய சிந்தனையை உலகிற்கு உணர்த்தும்.
திருக்கயிலாயத்திலேயே நந்தியம்பெருமானின் ஆசிபெற்ற யோகியர் ஒருவர் இருந்தார். அவர் அகத்தியரிடம் நட்புகொண்டு, அவர்தங்கியிருந்த பொதிகைமலையை அடையும்பொருட்டு, திருக்காளகத்தி, சிதம்பரம்,திருவாவடுதுறை தலங்களுக்கு சென்றார். அவ்வாறு செல்லுகையில் பசுக்கூட்டங்கள் ஓரிடத்தில் அழும் ஓசை கேட்டார்.
இடையர்குடியில் பிறந்து தன் மரபுப்படி பசுக்கூட்டங்களை மேய்த்து வந்தார் மூலர். அப்போது அவரதுகாலம் முடிந்துவிட்டதால் கூற்றுவன் அவரது உயிரைப் பறித்தார். உயிரில்லா உடலைகண்டு பசுக்கள் வருந்துதலை கண்டு இப்பசுக்கள் அடைந்த துன்பத்தை ஒழிப்பேன் என உறுதி கொண்டார். தன் உடலை பத்திரமாய் ஓரிடத்தில் காவலில் வைத்து, மூலரின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்தார் அந்த யோகியர்.
[பாய்த்தியபின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம்
நாத்தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின்
நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால்]
உயிரைசெலுத்திய யோகி திருமூலராய் எழுந்தார்.பசுக்கூட்டம் மகிழ்ச்சியுற்று தம் நாவினால் தடவின, வால்கள் மகிழ்ச்சியினால் மேல்நோக்கி எழும்பியது. துன்பம் நீக்கி வரிசையாய் நின்று மேய்ந்தன. பொழுதுமங்கியதும் பசுக்கூட்டத்தினோடே பின்சென்று வீடடைந்தார். தயக்கம் காரணமாய் வெளியேநின்றார். மூலரின் மனைவி இன்று ஏன் இவ்வளவு தாமதம்? என கடிந்துகொண்டே உடற்தீண்ட, பதறிப்போன திருமூலர், உமக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றார். பின் அங்கிருந்து பொதுமடம் போய் தங்கினார். அன்று முழுவதும் எவருடனும் பேசவால்லை. மூலரது செய்கையை கண்ட அவரது மனையாள், மறுநாளே உறவினர்களை அழைத்து வந்து நடந்ததை கூறினாள். அவர்கள் பண்டுவம் பார்ப்பவரை அழைத்து மூலரின் நாடியை பிடித்து
பார்க்க, நாடி சரியாய் இயங்கியது, பின் அனைவரிடமும் சென்று இது பித்தம் உண்டானதால் வந்த மயக்கம் அன்று, வேறு ஏதோ ஓர் சார்பு இவருக்குள்ளது. உள்ளத்தின் வேறுபாடு நீங்கி, சியோகத்தில் அழுத்திய கருத்தை இவர் அடைந்துள்ளார். இத்தன்மை யாராலும் அளவிடற்கு அரியதாம் என்றனர். அதனைகேட்டு மயங்கினாள் மூலரின் மனையாள். இனிமேல் இவருடன் இல்வாழ்க்கை நடத்த இயலாது என உணர்ந்து உறவினர் அழைத்து சென்றனர்.
சிவயோகியார் ஏற்கனவே தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அதைத் தேடி அவர் அங்குச் செல்லவும், அவ்வுடல் அந்த இடத்தில் காணப்படவில்லை. எல்லாம் இறைவன் செயலேயாகுமென முற்றிலும் உணர்ந்த மூலனுடலில் தங்கியிருந்த சிவயோகியார் திருவாவடுதுறையின் திருக்கோயிலின் மேற்றிசையில் இருந்த ஒர் அரச மரத்தின் கீழ் பல ஆண்டுகள் யோக நிட்டையில் அமர்ந்தார். இறைவன் தந்த ஆகமப் பொருளை, இறைவன் திருவருளால், திருமந்திரம் என்கின்ற ஒப்பற்ற தமிழ் வேதமாம் மூவாயிரம் பாடல்களில் பாடினார். பின் ஈசன் திருவருளால் திருக்கயிலாமடைந்தார்.
”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#திருமூலநாயனார்
#முப்பதாம்நாள்

No comments:
Post a Comment