தினம் ஒரு அடியார்-29
ஏயர்கோன் கலிக்காமர்:
சோழநாட்டின் திருப்பெருமங்கலத்தில் ஏயர்குடியில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: ஆனி ரேவதி
வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து திருபுன்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருபெருமங்கலம். காவிரியின் வடகரையிலுள்ள இவ்வூரில் நிறைய அழகிய மாளிகைகள் கொண்ட ஊராகும்.செழுமையான உழவுத்தொழிளால் நீங்காத வளமைகளை பெற்றிருந்தது இவ்வூர். கலிக்காமர் பிறந்த ஏயர் குடியானது சோழஅரசர்களின் படைத்தலைவராக தொன்றுதொட்டு வரும் ஒரு குடியாகும். திருநீற்றை விரும்பும் ஈசனின் அடியைப் பற்றுவதே நிலையான செல்வம் எனும் கருத்தினை உடையவர்.
சுந்தரரின் சமகாலத்தில் வாழ்ந்த இவர், சுந்தரர் சிவபெருமானை பரவைநாச்சியாரிம் தூது விட்டதை கேள்விப்பட்டிருந்தார்( இக்கதையினை சேக்கிழார் 75 பாடல்களில் கூறுகிறார்)
இவரெல்லாம் ஒரு மனிதரா? இது என்ன பாவம்!ஈசனையே தூது விடுகிறாரே! என அவர்மேல் வெறுப்பு கொண்டிருந்தார். ஒரு பெண்ணிற் பொருட்டு ஈசனையே தூது விட்டவனை நேரில் கண்டால் என்னவோ செய்துவிடுவேன்! என சினத்தால் பொருமினார். கலிக்காமரின் இந்த கோபத்தினை கேள்விப்பட்டார் சுந்தரர். தன் செயலுக்காக வருந்தினார். ஈசனிடம் கலிக்காமரின் கோபத்தினை போக்குமாறு வேண்டிக் கொண்டார். இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க இறைவன் எண்ணினார்.
கலிக்காமருக்கு கொடிய சூலைநோயை வருவித்தார் ஈசர். தீயில் காய்ச்சிய வேல் உள்ளே குடைவதை போன்று பெரும் துயரம் அளித்தது, மிகவும் மனமுடைந்து ஈசன்திருவடியை விழுந்து வணங்கினார். அவர் ஈசர் காட்சியளித்து, உனது சூலைநோய் வன்தொண்டரான சுந்தரராலன்றி அந்நோய் தீராது! எனகூறி மறைந்தார்.
எம்பெருமானே! எம் தந்தையும், தாத்தனும், அவர்தந்தையும் என வழிவழியாய் தங்கள் திருவடியே சரணம் என தங்கள் பாதம்பற்றி வணங்கி வந்தோம்! இன்று புதிதாக எவனோ வந்துதான் அந்த நோயை தீர்ப்பான் என்று கூறுகிறீர்!
[மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்
கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே]
அந்த வன்தொண்டன் வந்துதான் எனக்கு நோய் தீருமானால், அதைவிட அந்த சூலைநோயே எனை வருத்தட்டும் என மனமுடைந்து கூறினார். முன்பைவிட சூலைநோய் வாட்டியது கலிக்காமருக்கு, சூலைநோயின் வெப்பபத்தினால் புழுவாய் துடித்தார். சுந்தரரின் கனவில் தோன்றிய ஈசர், வன்தொண்டரே நீவிர் உடனே சென்று எம்கலிக்காமரின் சூலைநோயை போக்குவாயாக! என ஆணையிட்டார். தான் வருவதை ஏவலாளிடம் சொல்லியனுப்பினார் சுந்தரர். இதனை கேட்டு கடுஞ்சினம் அடைந்தார் கலிக்காமர். அவன் வந்துதான் என் நோய் தீருமெனில், அதற்கு இந்த சூலைநோய் வயிற்றைகுத்தி கிழித்து இறந்துவிடுவேன் என கூறி உடைவாளால் தன் வயிற்றை ஓங்கி குத்தி கிழித்தார். அப்போதே கலிக்காமரின் உயிரோடு சேர்ந்து சூலையும் அகன்றது. ஒப்பிலா அவரது மனையாளும் இறக்க முற்படுகையில் சுந்தரர் அங்கு வரும் செய்தியை அறிந்தார்.சுற்றி அழும் உறவினரைபார்த்து "ஒருவரும் அழ வேண்டா" என கூறி, சுந்தரரை வரவேற்கும் வண்ணம் வாயிலை அலங்கரித்தார்.அவரை உயர்ந்த ஆசனத்தில் இருக்க வைத்து வணங்கினார். கலிக்காமரின் மனைவி.
வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் கலிக்காமருடைய சூலையை நீக்கி அவருடன் இருப்பதற்கு விரும்பி வந்திருக்கின்றேன் அவர் எங்கே? என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியாரின் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வந்து வணங்கி சுவாமி அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்றனர். அதுகேட்ட ஆரூரர் தீங்கேதுமில்லை என்றீர்கள் ஆயினும் என் மனம் தெளிவு பெறவில்லை.ஆதலால் அவரை நான் உடனே காணுதல் வேண்டும் என்றார். அது கேட்டு அவர்கள் கலிக்காமர் உடலைக் காட்டினர். கலிக்காமர் குடல் சரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் நிகழ்ந்தது நன்று யானும் இவர் போல் இறந்து அழிவேன் என்று குற்றுடைவாளைப் பற்றினார்.அவ்வாறு பற்றி வாளைவீசுகையில் ஈசன் அருளால் கலிக்காமர் உயிர்பெற்றார். விரைந்து எழுந்து சுந்தரரின் கையிலிருந்த வாளைபிடித்து, வன்தொண்டரான சுந்தரின் பாதம் பணிந்தார் கலிக்காமர். உடனே சுந்தரரும் கலிக்காமர் பாதம் பணிய விரைந்தார். இந்த வியப்பான விடயம் பார்த்த கந்தர்வர், வித்யாதரர் வானிலிருந்து பூமாரி பொழிந்தனர்.
நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் அவரின் இசைவு பெற்றுத் தம்முடைய ஊரான பெருமங்கலக்குடிக்கு திரும்பினார். அங்கு பற்பல திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.
"ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#ஏயர்கோன்கலிக்காமர்
#இருபத்தொன்பதாம்நாள்

No comments:
Post a Comment