Tuesday, 5 May 2020

பெருமிழலைக் குறும்ப நாயனார்

தினம் ஒரு அடியார்-22

பெருமிழலைக் குறும்ப நாயனார்:

மிழலை நாட்டின் பெருமிழலையில் பிறந்தவர் இவர். இவரதுபூசைநாள்:ஆடிசித்திரை பழம்பெரும் வேளிர்களில் ஒருவனான வேள் எவ்வி ஆண்ட நாடே மிழலை நாடு எனப்பட்டது. எவ்விக்கு 'நீடூர் கிழான்' எனும் மற்றொரு பெயர் உண்டு. நீடூர் என்பது இன்று நீடாமங்கலம் என அழைக்கப்படுகிறது!  இந்நாடுஅன்று அறந்தாங்கி வரை நீண்டு பரவியிருந்தது. இந்நாட்டிலுள்ள குறும்பர் இன தலைவராய் இருந்து குறுநில அரசனாய் திகழ்ந்தவர் மிழலைகுறும்பர். ஈசனின் அடியார்பாதம் பணிந்து சேவைசெய்வதில் பேருவகை கொண்டவர் இவர். சிவத்தொண்டர் எத்துணை பேர் வரினும், அத்துணை பேருக்கும் உணவளித்து, தங்களுடன் கொண்டு செல்ல வழிச்செலவிற்கு செல்வமும் கொடுத்து வழியனுப்பிவைப்பார். இவரின் திருத்தொண்டின் திறத்தை இவ்வுலகம் காணும் அந்தநாளும் வந்தது.
அடியாரது உள்ளத்துள் நீங்காது இருக்கும் திருத்தொண்டர்தொகையை விதிப்படி வணங்கி, அதனைப்பாடிய சுந்தரரை வணங்கினார்.சுந்தரரின் மேல் மிகுந்த அன்புகொண்டு வாழ்ந்தார்.

[நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 
 ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 
 மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 
 கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்]
 தினந்தோறும் சுந்தரரின் திருநாமத்தை கூறுவார். அதன்காரணமாய் தாம் கைக்கொண்டு ஏவல்கொள்ளும் தன்மையால் அனிமா, மகிமா, லகிமா முதலான அட்டாமாசித்துகளை கைவரப் பெற்றார். அதன்பின் மேலும் ஈசனின்மேல் அன்பு பிரவாகமாய் பெருகியது. இவ்வாறு செல்கையில், சுந்தரரின் திருமணவைபவம் நிகழ இருந்த சமயம், கிழவேதியர் வேடம்பூண்டு சிவபெருமானார் திருவெண்ணெய்நல்லூரில் வழக்காடினார். நிலைபெற்ற மூலஓலைல்லை அவைமுன் காட்டி தடுத்தாட்கொண்டார்.அத்தகைய சுந்தரர் உச்சியின் மீது நிலவுதோயும் வண்ணம் உயர்ந்த நெடுமாடங்களையுடைய கொடுங்களூர் போய்ச் சேர்ந்தார். திருவஞ்சைக்களத்தில் தேவாரம் பாடினார் சுந்தரர்.இதனால் சுந்தரருக்கு திருக்யிலாய பேரு கிடைக்க இருப்பதை, தன் யோகத்தால் இருந்த இடத்திலிருந்து தெரிந்து கொண்டார். மண்ணுலகில் அனைவரும் போற்றும் தெய்வசுந்தரர் நாளை திருக்கயிலாய பேறு அடையப்போகிறார். அவரைப்பிரிந்து நான் ஒருக்காலும் இருக்கமாட்டேன். யோகநெறியின் மூலம் நானும் கயிலாயம் செல்வேன் என சூளுரைத்தார்.

[நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 
 காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 
 ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 
 மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்]

மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் ஆகிய அந்தகரணங்கள் நான்கினையும் ஒருங்கிணைத்தார். உணர்ச்சியானது சுழுமுனை வழியே பிராணவாயுவை செலுத்தச் செய்தார். கபால நடுவில்  பொருந்தும்படி முன்னேதாம் பயின்ற யோகநெறியால் எடுத்த பிரணவ மந்திரமானது பிரம்ம ரந்திர வாயிலை திறக்கும்படி செய்தார். அவ்வழியின்மூலம் ஈசனின் திருவடிகளை அடையவேண்டி திருக்கயிலைமலையை சுந்தரர் அடையும்முன்னே தான் அடைந்தார்.

"பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#பெருமிழலைக்குறும்பனார்
#இருபத்தியிரண்டாம்நாள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog