Tuesday, 5 May 2020

குலச்சிறையார்

தினம் ஒரு அடியார்-21

குலச்சிறையார்:

தென்பாண்டி நாட்டிலுள்ள மணமேற்குடியில் பிறந்தவர் குலச்சிறையார்.
 இவரது பூசைநாள்:ஆவணி அனுஷம் பாண்டிய நாட்டு மணமேற்குடி தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் வட்டத்தில் வங்கக் ககடலோரம் அமைந்த ஊராக விளங்கி வருகிறது!  பாண்டியநாட்டின் வடஎல்லையாய் விளங்கிய வெள்ளாற்றின் தென்கரைப் பகுதியில் உள்ளது. பாண்டியர் கல்வெட்டுகளில் இவ்வூர் மிழலைக்கூற்றத்தின் உட்பிரிவைச் சேர்ந்த ஊராய் குறிக்கப்படுகிறது.
மணமேல்குடியின் முதல்வர் வன்தொண்டரான சுந்தரரால் ஒப்பில்லாத பெருநம்பி என போற்றப்பட்டவர் குலச்சிறையார் ஆவார். சிவபெருமானின் அன்பினை பெற அவர்தம் அடியார்கள் அருளே போதும் என்ற பிடிப்பினை உடையவர். ஈசனின் அடியார்களை வழியில் கண்டால், ஓடோடிச்சென்று நிலத்தில் விழுந்து வணங்குவார், போற்றுவார். அடியார் ஒருவராகினும், பெருங்குழுவாய் வருகினும் அடியாரின் பாதம் பணிந்து வணங்கும் விருப்பம் உடையவர் மேலும் அவர்களுக்கு திருவமுது கொடுத்து சிறப்புடன் கவனிப்பார்.
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனாரின் சிறப்புமிக்க அமைச்சர்களில் ஒருவர் குலச்சிறையார்.

[ஆய செய்கையர் ஆயவர் ஆறணி    
 நாயனார் திருப்பாதம் நவின்று உளார்   
 பாய சீர் புனை பாண்டிமாதேவியார் 
 மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார்]

எங்கும் பரவிய புகழைக் கொண்ட மங்கையர்கரசி அம்மையாரின் திருத்தொண்டிற்கு உண்மைத்தொண்டராக அமைச்சர் குலச்சிறையார் விளங்கினார். பாண்டியநாடு சமணநெறியை அகற்றிடவும், திருநீற்றுநெறியை போற்றிடவும் வழியமைத்துத்தந்த திருஞானசம்பந்தரின் பொற்திருவடிகளை தமது தலையில் சூட்டி மகிழ்ந்தவர்.

[வாதில் தோற்ற அமணரை வன் கழுத்       
 தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் 
யாது போற்றினேன் மேலினி ஏத்துகேன் 
 வேத நீதி மிழலைக் குறும்பர்தாள்]

வாதில் தோற்ற சமணர்களை வன்மைகொண்ட கழுமரத்தில் தீமைகள் யாவும் வண்ணம் ஏற்றுவித்தவர் குலச்சிறையார்.

“பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்”

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#குலச்சிறையார்
#இருபத்தொன்றாம்நாள்





No comments:

Post a Comment

Popular Posts In This Blog