தினம் ஒரு அடியார்-20
திருநாவுக்கரசு நாயனார்:
பக்தி இலக்கியம் வளர்த்த நால்வரில் இரண்டாமவர். இவரது இயற்பெயர் மருணீக்கியார். பரவலாய் அறியப்படும் பெயர் அப்பர் என்பதே. இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே"என பல பாழடைந்த கோவில்களை உழவாரம் செய்து மீட்டவர். திருமுனைப்பாடிநாடு என அன்று அழைக்கப்பட்ட இன்றைய கடலூர் மாவட்டம் திருவாமூரில் தோன்றியவர்.
இவரது பூசைநாள்: சித்திரைசதயம்சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர் பெண்ணை ஆறு பாய்கின்ற மிக்க வளம் பொருந்திய ஊர் திருவாமூர். அவ்வூரில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாய் பிறந்தவர் அப்பர் பெருமான். இவருக்கு முன்னர் திலகவதியார் எனும் சகோதரி பிறந்தார். வருடஞ்செல்ல திலகவதிக்கு ஆண்டு பன்னிரண்டு ஆனது. வீரத்தன்மை பொருந்திய வலிய ஆண்சிங்கத்தைபோன்ற கலிப்பகையார் திலகவதியை மணமுடிக்க விரும்பி பெரியோர்களை அனுப்பிவைத்தார். புகழனாரும் கலிப்பகையாரின் திறத்தை மெச்சி தம்மகளை மணமுடிக்க சம்மதித்தார். மணமுடிக்கும் முன் கலிப்பகையாரின் மன்னருடன் பகைவர் போர்புரிந்தனர், ஆகவே கலிப்பகையாரும் போரு.கு செல்ல வேண்டியிருந்தது. நீண்டநாள் போர்மூண்டது. அதற்குள் இங்கே கொடியநோயினால் பீடிக்கப்பட்டு புகழனார் இறந்தார். அவர் இறந்தவுடன் அவரது மனைவி மாதினியாரும் உடனே இறந்தார். கனநேரத்தில் குடும்பம் நிலைகுழைந்தது. சுற்றத்தார் ஆறுதலளிக்க நீத்தார்சடங்கு நன்முறையில் நடந்தது. இங்கே இந்த கொடுமைநடக்க அங்கோ கலிப்பகையார் போரில் விழுப்புண் எய்தி இறந்தார்.இவ்விஷயம் கேள்விப்பட்டு திலகவதி தான் இறக்கமுனைந்தார். மருணீக்கியார் திலகவதியை தடுத்து பாதம் பணிந்து தடுத்தார்.திலகவதியார் அதைக் கேட்டு தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும், என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேறொருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.
மருணீக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தல்களையும் அமைத்தார். சோலைகளை வைப்பித்தார், குளங்களைத் தோண்டுவித்தார், விருந்தினரை உபசரித்தார், புலவர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். தலைமயிறை மழித்தும், நின்றவாறே உணவு உண்டும் வாழ்கின்ற சமணமதத்திற்கு மாறினார். பாடலிபுத்திரம் சென்று சமணநூல்கள் பல கற்று மகாபண்டிதரானார். திலகவதியாரோ சிவபக்தி மிகுந்து திருவதிகை வீரட்டானம் சென்று கோலமிடுதல், விளக்கிடுதல் பூக்களை பறித்து மாலையிடுதல் என பழுத்த சிவப்பழம் ஆனார். இவ்வாறு ஒரேவீட்டில் தோன்றிய இருவரும் இருவேறு நெறிகளில் கரைகண்டிருந்தனர்.
[தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்]
திருவதிகை மகாதேவரிடம், தவம்மேற்றதாய் எண்ணிக்கொண்டு என் தமையன் முடியை மழித்து தீயநெறியான சமணத்தை மேற்க்கொண்டுள்ளான்.அவனை அம்மதத்தில் மேலும் விழாதிருக்க நீவிர் அருளவேண்டுமென வேண்டினார் திலகவதியார். அன்றிரவே அவர் சொப்பனத்தில் தோன்றிய ஈசர், உம் தம்பி முன்னொருபிறவியிலே முற்பிறவியில் எனைக்காண தவம்புரிந்தான், தவநெறி சிறிது வழுவியதால் அச்செயல் அப்பிறவியில் கிட்டவில்லை. ஆகவே அதன்பலன் காரணமாய் அவன் மாற்றுமதத்தில் பிரவேசித்துள்ளான். அவனை நாம் சூலநோய் கொடுத்து இப்பிறவியில் ஆட்கொள்வோம் என கூறி மறைந்தார்.
அவ்வாறே வயிற்றில் கொடிய சூலநோயினால் அவதிப்பட்டார் மருணீக்கியார், சமணமடத்தில் வைத்து எண்ணற்ற வைத்தியம் பார்த்தும் வியாதி தீராது அவதிப்பட்டார். வேறுவழியின்றி தன்சகோதரியிடம் சென்று முறையிட்டார்.
திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார். "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார். இதனை கேள்விபட்ட சமணர், சமணம் வளர்த்த நம் தர்மசேனர் இன்று தனக்கு ஏற்ப்பட்ட சூலைநோயால் திருவதிகைசென்று குணமடைந்தார், மேலும் சைவமதத்தை தழுவிவிட்டார். இனி அவர் சமணத்திற்கு ஒருகாலும் திரும்பமாட்டார் சமணம் இனிஅழியும், என பல்லவ பேரசன் மகேந்திரவர்மரிடம் முறையிட்டனர். அவரும் தருமசேனரை தண்டிக்க ஆணையிட்டார், வீரர்கள் அவ்வாறே சென்று மருணீக்கினாரிடம் கூற, திருநாவுக்கரசுநாயனார் "நாமார்க்குங் குடியல்லோம்" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, "நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்" என்றார்.
சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது. என பலதுன்பங்களுக்கு ஆளாகி இறையருளால் மீண்டார். இதனைக்கண்ட மகேந்திரவர்மர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மனம் மாறி பல கோவில்களை கட்டுவித்தான். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மேல்குடைவரைகோவிலில் இவனது கல்வெட்டு ஒன்று, தான் மாற்றுசமயநெறியிலிருந்து லிங்கவழிபாட்டிற்கு மாறினேன் என கூறுவது இக்கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது.
அதன்பின் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார் மருணீக்கியார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். முதன்முதலில் இவர் உழவாரம் பண்ண தலம் திருப்பூந்துருத்தி என நம்பப்படுகிறது.
தன் முதிர்ந்த வயதிலும் ஞானக்குழந்தையான திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து பல தல யாத்திரைகளுக்கு திருப்பயணம் . இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. 49000தேவார பதிகங்களை பாடியுள்ளார். சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் ஈசன் திருவடியை அடையும் பேறு பெற்றார். திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
#தினம்ஒருஅடியார்
#அப்பர்
#இருபதாம்நாள்
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

No comments:
Post a Comment