தினம் ஒரு அடியார்: 17
திருநாளைப்போவார்:
சோழவளநாட்டின் ஆதனூரில் புலையர் குலத்தில் பிறந்தவர் இவர். இவரது இயற்பெயர் நந்தன். பெரியபுராணம் நந்தனார் பிறந்ததாய் கூறும் மேற்காநாட்டுஆதனூர் இன்று 'மேலானாட்டனூர்' என அழைக்கப்படுகிறது இவ்வூர். நந்தனார் தினமும் வழிபட்ட திருபுன்கூருக்கு (வைத்தீஸ்வரன்கோவில் அருகே) அருகேயுள்ளது. தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்ததாய் கூறப்படுகிறார் நந்தனார்.
[மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி]
அவ்வூரில் மூன்று தெருக்கள் பிரதானமாய் உள்ளன. அங்குள்ள கோவிலைஒட்டி அக்ரஹாரமும், மறு தெருவில் இடைநிலை சாதியினரும், ஊருக்கு புறத்தே பஞ்சமர் எனும் மக்கள் வசிக்கின்றனர், இவர்களில் ஒருவர்தான் தெய்வமாக்கப்பட்ட நந்தனார். சேக்கிழார் சித்தரித்த சமூகநிலை இன்னும் மாறாமல் அவ்வாறே உள்ளது. புலைச்சேரியின் அன்றைய நிலையை சேக்கிழார், மருதமரநிழலில் மரப்பட்டைகள்மேல் தம் குழந்தைகளை உறங்கச் செய்வார், பெரியபானைகளில் பெட்டைக்கோழிகள் ஒடுங்கியபடி தம்முட்டைகளை அடைகாக்கும், வார்களால் இழுத்துக்கட்டப்பட்ட பறைமேளங்கள் மாமரங்களில் தொங்கும். மரப்பொந்தின் அடிப்பகுதியில் நாய் உறங்கும், புலைச்சியர் நெற்கதிர்களை சூடிக்கொண்டு கள்ளினை உண்டு ஆடுவர். அவர்களின் ஆட்டத்திற்கேற்றவாறு பறைகள் ஒலிக்கும், என்று அன்றைய சூழலைக்காட்டுகிறார்.
இத்தகைய இயல்புடைய புலைப்பாடியில் நந்தனார் தோன்றினார். தம்குலரிற்குரிய சிவதருமங்களைச் செய்து, ஈசனிடம் பேரன்பு கொண்டு வந்தார். தினமும் கோவிலுக்கு தேவையான இசைக்கருவிகளுக்கு தோலும், வீணை நரம்பும் இன்னும் சில பொருட்களை கொடுத்தும் வந்தார். திருக்கோவிலின் வெளியே நின்று ஈசன்புகழ் மெச்ச ஆடிப்பாடி மக்களை மகிழ்விப்பார் (அன்றைய சூழலில் அவரை கோவிலில் விட்டிருப்பனரோ என்பது சந்தேகமே) திருப்புன்கூர் ஈசன்மீது அன்பு அதிகம் ஆகவே, அவரை தரிசிக்க எண்ணி திருப்புன்கூர் வந்தடைந்தார். நந்தனார் வாசலிலிருந்து திருப்புன்கூர் ஈசனை நினைத்து உருகி பாடி, சிவதரிசனம் கான எண்ணினார். அவர் வேண்டியதற்கிணங்க சிறுகுன்றுபோல இடத்தை அடைத்திருந்த நந்தியை விலக்கி நந்தனாருக்கு காட்சியளித்தார் ஈசன். அங்கு சென்றவர், திருக்கோவிலில் குளம் இல்லாதது கண்டு, ஒரு பெரும்பள்ளம் அங்கிருப்பதைக் கண்டார்.அதனை குளமாய் தோண்டினார். ஈசன் வீற்றிருக்கும் தலங்கள் அனைத்திருக்கும் சென்று வணங்கி உண்மையான சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார். ஆயினும் தில்லையம்பலத்தை காணாத பெருங்குறை மனதை வாட்டியது. ஆயினும் போவதற்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை, எனினும் கண்டே தீருவதென முடிவாய் இருந்தார். ஆகவே சுற்றத்தாரிடம் 'நாளை போவேன் தில்லை' என தினமும் கூறுவார். அதுவே அவரது காரணப்பெயராய் நிலைத்து இன்றுரை, 'திருநாளைப் போவார்' என அழைக்கப்படுகிறார். அந்த நாளும் வந்தது.
[செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்]
தில்லையின் எல்லையை வந்தடைந்தார். இருகரம்கூப்பி தில்லையின் எல்லையை வணங்கினார். வேள்விகளில் எழும் புகையும், மறைகள் ஓதுகின்ற நெருக்கமான மடத்தினையும் கண்டார். தம்குலத்தின் நினைவு வர அங்கு செல்லலாமோ என அஞ்சினார் (இறைவனை அடைய குலம் ஒரு தடையோ!) தமது இயலாமையை எண்ணி மனம் வருந்தினார், அங்கு மாடங்கள் தோறும் வேதிகைகளுடன் பிரம்மாண்டமாய் அகன்ற மதில்களையுடைய மூவாயிரம் வீடுகள் இருந்தது. எம்பெருமானை அடைய தடையாய் தம்குலமும், பிறவியும் உள்ளதே என வருத்தத்துடன் கண்உறங்க, கனவில் சிரித்த ஈசனார்,
[இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்]
இந்தபிறவி நீங்க, நீ தீயில் மூழ்கி பூணூல் அணிந்ந அந்தனராய் பிறந்து! என்முன் தோன்றுவாயாக! என கூறி, அதேபோல் தில்லை அந்தணர் மூவாயிரம்பேர் கனவிலும் ஒருசேர தோன்றி (😢?) நந்தன் தீயில் முழுக தீ உண்டாக்குமாறு கூறினார்.
இறைவன் கட்டளையை ஏற்ற மூவாயிரவரும் ஒன்றுகூடி, அவ்வாறே செய்ய முடிவெடுத்து, அன்புகொண்ட நந்தனாரிடம் வந்தனர்.
[ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்]
தலைவரே! இறைவன் உமக்கு தீ உண்டாக்கி தருமாறு கேட்டுக்கொண்டார்! தாங்களே வந்து தீயில் இறங்குகக என கூற, நந்தனார் 'நான் உய்ந்தேன்' என கூறினார். தீஅமைத்த இடம் எதுவென சேக்கிழார் கூறியிருக்கிறார், 'தென்திசையின் மதில்புறத்து பிறைஉரிஞ்சும் திருவாயிலின் முன்னாக' இப்போதும் ஓமக்குளம் எனும்பகுதி கோவிலுக்கு தென்திசையிலே கோவில்மதிலுக்கு புறத்தேதான் உள்ளது.
ஒல்லைபோய் உட்புகுந்தார்:
மூட்டிய தீயினை இருகரம்கூப்பிச் சுற்றிவந்து, திருக்கூத்து ஆடல்வல்லானை நினைத்து தீயினுள் புகுந்தார். உருவழிந்து தோன்றினார் என சேக்கிழார் கூறுகிறார். அப்படியாயின் அவரது உடல்முழுவதும் கருகி சாம்பலாகியிருப்பார். அதன்பின் மீண்டும் முனிவர்கோலத்தில் மார்பில் பூணூல் தோன்ற காட்சியளித்தார் நந்தனார். நான்முகனைப்போல காட்சியளித்தார், வானத்தில் துந்துமி முரசின் ஓசை ஒலித்தது. தேவர்கள் பூமாலை பொழிந்தனர். அக்காட்சியை கண்ட தில்லைவாழ் அந்தணர் கைக்கூப்பினர்.அதன்பின் மூவாயிரவர் சூழ கோவிலினுள் நுழைந்து ஈசன் திருவடியை தரிசித்தார். ஜோதியில் கலந்தார்.அதன்பின் எவரும் அவரை காணவில்லை என முடிக்கினார் சேக்கிழார்.
#தினம்ஒருஅடியார்
#திருநாளைப்போவார்
#பதினேழாம்நாள்

No comments:
Post a Comment