தினம் ஒரு அடியார்-16
உருத்திரபசுபதி நாயனார்:
சோழநாட்டின் திருத்தலையூரில் பிறந்தவர் இவர், இவ்வூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ளது. இவர் அந்தனர் குலத்தில் பிறந்தவர் இவரது
பூசைநாள்: புரட்டாசி அஸ்வினி. ரிஷபாருடராய் உமையம்மையுடன் காட்சியளிக்கும் ஈசனின் திருநாமமான பசுபதி எனும் பெயரையே தன்பெயராய் கொண்டவர். ஈசனின் திருவடிகளைப் பற்றி தினமும் உருத்திர மந்திரத்தினால் துதிப்பவர். ஒருநாள் இறைவன்மேல் கொண்ட அன்பு மேலிட,
[கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும்
நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி]
பறவையின் குரல் இடையிடாது ஒலிக்க, மெல்லிய வண்டுகள் ரீங்காரமிட, வரால்மீன்கள் துள்ளி விளைள்ளாடும் நீர்நிலைக்குள் சென்றார். குளிர்ந்தநீர் கழுத்தளவுள்ள பொய்கைக்குள், சிவபெருமானின் அடிமைத்திறத்தை மனதினினுள் கொண்டு, இருகையினையும் உயரே தூக்கி திருவுருத்திர மந்திரத்தை துதிக்க ஆரம்பித்தார். பகல் செல்ல ஆரம்பித்தது. மாலைவந்தது, அதுவும் நீங்கி இரவாகியது. மறுநாளும் புலர்ந்தது. பசுபதியார் ஓதுவதை நிறுத்தவில்லை. தன் அடியாரின் உண்மைஅன்பினை கண்ட ஈசனார் ரிஷபாருடராய் வானில்தோன்றி, தன்னுடன் அழைத்துக்கொண்டார்.
[நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற]
மிக்க அன்புடனே திருவுருத்திரத்தை ஓதிய நிலையினால், ஈசனின் திருவடியை அடைந்ததால் "உருத்திரபசுபதியார்" என அழைக்கப்பட்டார்.
“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#உருத்திரபசுபதியார்
#பதினாறாம்நாள்

No comments:
Post a Comment