தினம் ஒரு அடியார்-15
முருகநாயனார்:
சோழநாட்டின் திருப்புகலூரில் பிறந்தவர் முருனார். இவர் அந்தனர் குலத்தில் பிறந்தவர்.
இவரது பூசைநாள்: வைகாசி மூலம்
ஈசனின் திருவடியை விரும்பி போற்றுபவர். வேதமுதல்வராய் ஞானத்தில் சிறந்தவர். ஈசனுக்கு சார்த்துவதற்கு மாலைகள் அணிவிக்கும் தொண்டினை செய்பவர்.
தினமும் சூரியன் உதிக்கும் முன்பே காவிரியில் நீராடி, மணம் கவிழும் இனிய மலர்களை கூடைகளில் பறித்து சார்த்துவார்.
[கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின்
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையிற் பன்னக நாண்
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து]
கோட்டுப்பூக்கள், நிலப்பூக்கள், நீர்ப்பூக்கள், கொடிப்பூக்கள் ஆகிய நான்வகை மலர்களையும், தன் வாயினிலிருந்து வெளிவரும் வேதத்தையும் ஒன்றாக சேர்த்து ஈசனின் பாதத்தில் சூட்டுவார். குணநலண்களில் சிறந்தவரான முருகனார், உமையம்மையின் முலைப்பாலை அருந்திய தெய்வக்குழந்தையான சம்பந்தரின் உற்ற நண்பராய் விளங்கினார். ஆளூடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தர்க்கு ஈசன் அருளால் திருமணம் முடிவானது.
மணமேடையில் மணமகளுடன் அமர, திருநீலநக்கர் தலைமையில், மணமகன் தோழனாய் முருகர், நீலகண்டயாழ்ப்பாணர் உடன் நிற்க, திருமண வைபம் இனிதே நடந்தேறியது.
"ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் நினது திருமணம் காணவந்தோர் யாவரும் ஈனமாம் பிறவிதீர யாவரும் இச்சோதியுனுள் வந்து சேர்மின்"
என அசரீரி ஒலித்தது. உடனே ஒரு சோதி தோன்றியது. அச்சோதியில் அனைவரும் கலந்தனர். வானுலகம் சென்றனர். சிவபதம் அடைந்தனர்.
(இது ஒரு விபத்து, சதி, இதில் அனைவரும் மாண்டனர், என்ற கருத்தும் உண்டு)
"முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#முருகநாயனார்
#பதினைந்தாம்நாள்

No comments:
Post a Comment