தினம் ஒரு அடிகள்-13
ஆனாய நாயனார்:
இவர் மழநாட்டிலுள்ள மங்கலக்குடி எனும் ஊரில் பிறந்தவர். இவரது பூசைநாள்: கார்த்திகை அஸ்தம், திருச்சிமாவட்டம் லால்குடியிலிருந்து பாச்சூர் வரையுள்ள பகுதிகள் மழநாடு என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறது. ஆனாயர் பிறந்த மங்கலக்குடி இன்று திருமங்கலம் என வழங்கப்படுகிறது. பொன்னிநதி சூழ்ந்த வளநாடாய் இருப்பதால் இங்கு நீர்வளம் நிறைந்து எப்போதும் காணப்படும். ஆகவே சோலைகள் நிறைந்ததாய் அன்று சேக்கிழார்பிரான் குறிப்பிடும் மங்கலக்குடி இன்றும் வளம்நிறைந்த ஊராகவே உள்ளது.
[கண் மலர் காவிகள் பாய
இருப்பன கார் முல்லைத்
தண் நகை வெண் முகை
மேவும் சுரும்பு தடஞ் சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய
இருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய
வன் சிறை வண்டானம்]
கண்போன்று வடிவுடைய குவளைமலர்கள், வெண்மையான அரும்புகளுடைய முல்லையரும்புகளில் படிந்த வண்டினங்களை பிடிக்கத் தாவுவதுபோல இருந்தன. நெற்பயிர்கள் உடைய வயல்களிலுள்ள கயல்மீன்கள் காயாமரத்திலிருந்த நாரையை பிடிப்பதுபோல பாய்ந்தன.
என அன்றைய மழநாட்டின் நீர்வளம் சோலைவனத்தை முதல் ஏழுபாடல்களில் வருணிக்கிறார் சேக்கிழார்.
இப்பழமையான மங்கலக்குடியில் ஆயர் குலத்தில் தோன்றியவர் ஆனாயர். சிவபெருமானின் திருவடிகளை போற்றுபவர். ஆநிரைகளை முல்லைநிலத்திற்கு ஓட்டிச்சென்று, அதற்கு மேய்ச்சல்காட்டி வனவிலங்கினங்களிலிருந்து அவற்றை காத்து வந்தார். ஆநிரைகளை மட்டுமல்லாது ஆயர்குடியினரையும் பாதுகாத்துநிக்கும் சான்றோராய் திகழ்ந்தார் ஆனாயர். சிவபெருமானின் திருவடிகளில் அன்புபொருந்தியவராய் துளைக்கருவியான குழலை இனிமையாக இசைப்பபார்.
[நிறைந்த நீறு அணி மார்பின்
நிரை முல்லை முகை சுருக்கிச்
செறிந்த புனை வடம் தாழத்
திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை
அரும்ப அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலி தானைப் பூம்
பட்டுப் பொலிந்து அசைய]
ஒருநாள் திருநீறு நிரைந்தமார்பில் முல்லை அரும்பால் நெருக்கமாக கட்டப்பட்ட மாலைதாழ்ந்து தொங்க, பருத்த தோள்களின் மீது அணிந்த மலர்கள், வண்டுகளின் ரீங்காரத்தால் மலர, பட்டாடை போர்த்திய மேலாடை அசையகைகளில் வெண்கோலும், குழலும், தம் ஏவலரும், ஆநிரைகளும் சூழ்ந்துவர அவற்றை மேய்ப்பதற்கு வெளியே வந்தார் ஆனாயர். அது கார்காலமானதால் மயில்கள் தோகையை விரித்து கூத்தாடின. ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றபோது கொன்றைமரம் ஒன்றை கண்டார். பூங்கொத்துகளை தாங்கிக்கொண்டிருந்த அம்மரத்தை காணுகையில், சடையினையுடைய பரமசிவன் நிற்கின்ற கோலமாய் கண்ணில்பட்டது. உடனே தன்குழலையெடுத்து முரலுதல், அமுதல், நிற்றல் எனும் ஓசையை தம் உதட்டால் குழலில் இசையை மீட்டினார்.
விரல்களை முறைப்படி செலுத்தி குரல், துத்தம், கைக்கிளை, உழை, விளரி, தாரம் ஆகிய இசைப்பண்களை ஏற்றஇறக்கமாய் பாடினார்.
[மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும்
வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும்
சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள்
அளவு பெற அசைத்தியக்கிச்
சுந்தரச் செங்கனிவாயும்
துளைவாயும் தொடக்குண்ண]
மந்திரம், மத்திமம், தாரம் எனும் மூன்றுவகையான சுருதிகளை சுரதானத்துக்குரிய துளைகளை முறையே மென்மையாகவும், சமமாவும் மூடினார், இடையிட்ட துளைகளை அளவுடன் அசைத்தும், இயக்கியும், சிவந்த அவரது உதடும் குழலின் துளைவாயும் ஒன்றாக இயங்கின.
அவரின் குழலிசை, புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்களை உண்ணவிடாமல் மெய்மறக்கச் செய்தது. பால்குடித்துக்கொண்டிருந்த இளங்கன்றுகளோ காம்பிலிருந்து வாயை எடுத்து அசையாது நின்றது. மாடுமேய்க்கும் கோபாலர்கள் மாடுகளைவிடுத்து கண்ணைமூடி இசையை கேட்டனர். பெரிய பற்களுடைய கொடிய பாம்பு, அந்த இசையில் மயங்கி தன்பகைவனான மயிலின்மேல் விழுந்தது. சலியாத நிலையுடைய சிங்கம் பெரிய யானையை கூடியது. அகன்ற புலியின் வாயில் மான்தன் தலையை தானே வைத்தது.
மண்ணுலகில் மட்டுமல்லாது இவ்விசை வானுலகின் சாரணர்களும், கின்னரர்களும், வித்தியாதரர்களும், தேவர்களும் இவ்விசையின் மூலத்தைதேடி விமானத்திலேறி வந்தனர்.
[ஆனாயர் குழல் ஓசை கேட்டு
அருளி அருள் கருணை
தானாய திரு உள்ளம்
உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதி
நாறுஞ் சடை தாழ]
ஆனாயர் குழழிசை கேட்டு, தன்உமையோடு ஈசனார் ரிஷபவாகனத்தில் எழுந்தருளினார். எல்லாதிசைகளிலிருந்தும் வானவர்கள் வந்துசேர நடுநாயகமாய் உமையும், சிவனும் தோன்றினர். இசைப்பண் பாடுவதை நிப்பாட்டி, கண்திறக்க தன் எதிரே வானவர்கள் சூழ, சிவபெருமானும் நிற்க ஒருகனம் ஆடித்தான் போனார் ஆனாயர். பின் கீழே விழுந்து பாதம் பணிந்தார்.
ஈசனாரோ,
அன்பனே! நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது நின்றநிலையிலே எம்மிடத்தில் வருவாயாக!" என்று கூற, அவ்வாறே அந்த நிலையிலிருந்து நீங்கி, இறைவன் திருவடி அடைந்தார். தேவர்கள் கற்பகமலரைத்தூவ பொன்னம்பலத்தை அடைந்தார் ஆனாயர்.
"அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்"
சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#ஆனாயநாயனார்
#பதிமூன்றாம்நாள்

No comments:
Post a Comment