தினம் ஒரு அடியார் -12
அரிவாட்டாய நயனார்:
சோழவளநாட்டில் கண்ணமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர் இவர். இவ்வூர்
திருத்துறைப்பூண்டி-திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது. இவ்வூர் இன்று 'கணமங்கலத்திடல்' என்றும் 'கண்ணந்தங்குடி' என்றும் அழைக்கப்படுகிறது.
பூசைநாள்: தைமாத திருவாதிரை. இவரது இயற்பெயர் தாயனார். வேளாளர் குடியில் தோன்றியவர் இவர். அவ்வூரில் வேளாண்மைத் தொழிலில் தலைமைப் பண்பினை உடையவர். குன்றா செல்வம் கொண்டவர். அறநெறியாளர் சிறந்த கொடையாளர். சிவந்த சடையினையுடைய ஈசனுக்கு தினமும் செந்நெல் அரிசிச்சாதமும், செங்கீரையும், மாவடுவையும் ஒவ்வொரு நாளாக அமுது சேவிப்பதை வழக்கமாய் கொண்டவர். துன்பம் வரும் காலங்களிலும் கூட விடாமல் இச்சேவையை செய்து வந்தார். ஆகவே அகமகிழ்ந்த ஈசனார், அவரைத் தம்முடன் வைத்துக்கொள்வதற்காகவே வழிவழியாய் சேமித்த செல்வங்களை படிப்படியாக குறைய வைத்தார். அவரது செல்வம் யாவும் யானைமேயும் கரும்புக்காடு போல கரைய ஆரம்பித்தது. எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவராய், விடாமல் அமுதுசேவிக்கும் பணியை தொடர்ந்தார்.
பெரும்நிலச்சுவான்தாராய் இருந்த தாயனார், கூலிக்கு நெல்லறுக்கும் பணியை மேற்கொள்ளும் அளவிற்கு வறுமை வாட்டியது. கிடைக்கும் கூலியினை கொண்டு செந்நெல் வாங்கி ஈசனுக்கு அமுது படைத்தார். கார்நெல் அறிந்து அதில் கிடைக்கும் கூலியை பெற்று தன்குடும்பத்தினருக்கு கொடுத்தார். தாயனாரின் மனைவியோ உண்ண உணவில்லாது வீட்டின் கொல்லையில் முளைக்கும் கீரையை சமைத்து உண்பார். ஆயினும் தவறாது இறைத்தொண்டு புரிந்து வந்தனர்.
[மனை மருங்கு அடகு மாள
வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க
அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்துச் செல்ல
மேவு நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு அங்கு
நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்]
வீட்டின் கொல்லையிலிருந்த கீரையும் ஒருநாள் தீர்ந்தும் போனது. வேறுவழியின்றி தண்ணீரையே உணவாக அருந்துவார். தாயனாரும் அதையே உண்டு இறைப்பணியாற்றினார். இதேகதை தினமும் தொடர்ந்தது. ஒருநாள் தாயனார் இறைவனுக்கு அமுதுசெய்விக்க செந்நெல், மாவடு, செங்கீரையையும், அவரது மனைவி 'ஆன் ஐந்து' எனப்படும் பஞ்சகவ்யம் எடுத்துக்கொண்டு சென்றனர். கடும்பசியால் நடக்கமுடியாமல் சுருண்டு விழுந்தார்தாயனார். அவர்கள் இருவரும் கொண்டுவந்த அனைத்து பொருட்களும் தரையில் விழுந்து சிதறியது.
[நல்ல செங்கீரை தூய
மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது
செய்து அருளும் அப்பேறு
எல்லையில் தீமையேன் இங்கு
எய்திடப் பெற்றிலேன் என்று
ஒல்லையில் அரிவாள் பூட்டி
ஊட்டியை அரியல் உற்றார்]
இனி எவ்வாறு இறைவனை காணசெல்ல, என மனம்வெம்பி தன்இயலாமையை எண்ணி மனம் வருந்தினார். நல்ல செங்கீரையும், தூய மாவடுவையும் அரிசியும் சிந்திவிட்டதே, இறைவனுக்கு அமுதுசெய்விக்கும் பேறு பெறவில்லையே என ஆற்றாமையில் வருந்தினார். பின் ஆவேசம் கொண்டவராய் விரைந்து அரிவாளைப் பூட்டி தம் கழுத்தை அரியத் தொடங்கினார்.
குற்றமற்ற தாயனாரது பரிபூரண அன்பைக் கண்டு அம்பலத்தில் திருக்கூத்தாடும் இறைவரின் திருக்கையும், மாவடுவினது, "விடேல்,விடேல்" என்ற ஓசையும் ஒருசேர எழுந்தன. இறைவனின் திருக்கை அரிவாளை பிடித்ததும், பிளவுபட்ட காயம் உடனே ஆறிற்று. மகிழ்ச்சி மேலிட தம் இருகரத்தை கைக்கூப்பி வணங்கினார்.
[என்றவர் போற்றி செய்ய
இடப வாகனராய்த் தோன்றி
நன்று நீ புரிந்த செய்கை
நன்னுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய்
என்று அவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழ
விடை உகைத்துச் சென்றார்]
தாயனார் ஈசனை துதிக்க, இறைவர் ரிஷபவாகனத்தில் காட்சியளித்தார். நீ செய்த நற்செயலால் உன் மனைவியுடன் என்றும் நீங்காமல் நம் உலகத்தில் வாழ்வாயாக! என்று அருள்வாக்களித்து அம்பலத்தில் நடனம்புரியும் இறைவர் தம் வாகனமான காளையுடன் விண்ணைநோக்கி சென்றார்.
தம்கழுத்தில் அரிவாளை பூட்டியதால்
'அரிவாள் நாயனார்' எனும் பெயரை உடையவராய் நிலைபெற்றார்.
“எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்”
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#அரிவாட்டாயநாயனார்
#பன்னிரெண்டாம்நாள்

No comments:
Post a Comment