தினம் ஒரு அடியார்-11
மானக்கஞ்சாற நாயனார்:
சோழநாட்டிலுள்ள கஞ்சனூரில் வேளாளர்குடியில் பிறந்தவர் இவர். இவ்வூரின் பழைய பெயர் கஞ்சாறூர். இவரதுபூசைநாள்: மார்கழி சுவாதி, இவரது குடும்பம் பரம்பரையாக சோழமன்னர்களுக்கு சேனாதிபதியாய் சேவைபுரிந்த குடும்பமாகும். இவர் பணிவை அணிகலனாய் கொண்டவர். சிவத்தொண்டர்களுக்கு சேவைபுரிதலயே வாழ்நாள் தவமாய் கொண்டவர். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். தன் செல்வம் அனைத்தையும் சிவனடியாருக்கு செலவிடுவதையே பாக்யமாய் கருதுவார். சிலகாலம் பிள்ளைப்பேறு இன்றி மிகவும் வருந்தினார் இவர். ஈசனின் திருவடியை தஞ்சம் புகுந்தார்.
எம்பெருமானின் அருளால் பெண்குழந்தை பிறந்தது. பழமையான அவ்வூர் விழாக்கோலம் பூண்டது. மகிழ்ச்சிப் பெருக்கினால் சிவனடியாருக்கும் ஊராரருக்கும் செல்வங்களை வாரிவழங்கினார் மானக்கஞ்சாறர். குழந்தையை பேணிபோற்றி வளர்த்தனர். குழந்தையும் வளர்ந்து வந்தது, காப்புஅணியும் குழந்தைப் பருவம் நீங்கி மணமுடைய பூக்களைச்சூடிய நீண்டகூந்தலும், பொன்குண்டலமும்தாழ்ந்து தொங்கி, கிண்கிணி அசைய, தளிர்போன்ற தன்மெண்மையான அடிகளால் நடக்கத் தொடங்கியது. திருமேனியின் புறத்தே பெரும்அழகு கூட, குற்றமற்ற குலத்திலே உதித்த கொழுந்தைபோன்ற அப்பெண் மணம்செய்யும் பருவத்தை அடைந்தாள்.
[திருமகட்கு மேல் விளங்கும்
செம்மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண் உலகில்
ஓங்கு குல மரபினராய்க்
கரு மிடற்று மறையவனார் தமர்
ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள் பேச
வந்து அணைந்தார் பெரு முதியோர்]
திருமகளுக்கு மேலாய் சிறந்துவிளங்கும் ஒப்பில்லா அழகுடைய அப்பெண்ணை, தன்குலத்தில் உதித்த சிவபெருமானின் அன்பராகிய ஏயர்கோன் கலிக்காமருக்கு மணம்செய்ய பெரியோர் பெண்கேட்டு வந்தனர். மானக்கஞ்சாறரும் மனமகிழ்ந்து சம்மதித்தார்.
ஏயர்கோனும் மனமகிழ, நிமித்தகர்களால் மணநாளிலிற்கு நாளும் குறித்தனர். ஊர் திருவிழாக்கோலம் பூண்டது. மணமுடிக்க ஏயர்கோன் இன்னிசைகருவிகள் முழங்க, கஞ்சனூரின் அருகே தன் உறவினர்சூழ மகிழ்ச்சியுடன் வந்தார். ஆனால் அதற்குமுன்னர் பெண்வீட்டின்அருகே ஈசனார் வந்தடைந்தார்.
தன்வீட்டின் முன்னே ஒளிபொருந்திய முனிவரைகண்டதால், ஓடோடி சென்று வரவேற்றார் மானக்கஞ்சாறர், முனிவரும், "இங்கு நடக்கும் நற்செயல் யாது?" என ஒன்றும் அறியாதது போல் வினவினார். தன்பெண்ணின் திருமணம் என பதிலுறைத்தார் மைமானக்கஞ்சாறர். "நல்லதுநடக்க" என வாழ்த்துரை கூறினார் முனிவர். உடனே உள்ளே சென்று தன்செல்வமகளின் கைப்பற்றி அழைத்து வந்து முனிவர் பாதம் விழுந்து வணங்கச் செய்தார். தன்னிடம் வேண்டுவோர் கேட்டதைவிட அதிகம்தரும் ஈசன், அப்பெண் கீழே வணங்க பாதம்பணிய, அப்பெண்ணின் கூந்தலை கண்டார். உடனே மானக்கஞ்சனாரை நோக்கி, 'அணங்கைப் போன்ற இவளது தலைமயிர் நமக்கு பஞ்சவடிக்கு ஆகும்' என்றார். (பஞ்சவாடி என்றால் மயிர்க்கயிற்றால் ஆன பூனூல் வடம்)
[அருள் செய்த மொழி கேளா
அடல் சுரிகைதனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன்
எனக் கொண்டு பூங்கொடி தன்
இருள் செய்த கருங்கூந்தல் அடியில்
அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார்
மலர்க் கரத்தினிடை நீட்ட]
இறைவன் கேட்கவும், மானக்கஞ்சாறர் வலிமைமிக்க தன் உடைவாளினை உருவினார். முனிவர் கேட்ட பஞ்சவாடி கொடுக்கும் பேறுபெற்றேன் என அகமகிழ்ந்து, பூங்கொடி போன்ற தன் அன்புமகளின் கூந்தலை அரிந்து மாவிரதியாரின் மலர்போன்ற கரங்களில் அளித்தார். அதனை வாங்கியதும் முனிர் மறைந்து, ரிஷபவாகனத்தில் உமாசகேதராய் ஈசன் காட்சியளித்தார். காணாக்காட்சியை கண்ட மானக்கஞ்சாறர் கீழேவிழுந்து தொழுதார்."உனக்கு எம்மிடம் எழும் அன்பின் திறத்தை வளமான இந்த உலகத்தில் நிலைக்குமாறு செய்தோம்" எனக்கூறி கீழேவிழுந்த தன் அடியாருக்கு அருள்புரிந்தார். பக்கங்களில் கணங்கள் பூமாலைதூவ, தேவர்கள் வாழ்த்தொலி எழுப்ப, இறைவனின் அருள்திறத்தை போற்றும் பெரும்பேறு பெற்றார் மானக்கஞ்சாற நாயனார். தேவர்கள் புடைசூழ மறைந்தார் ஈசன். கலிக்காமனாரும் அவ்விடம் வந்தடைந்தார் அங்கு நடந்த விஷயத்தை கேட்டறிந்து ஆனந்தம் கொண்டார் மானக்கஞ்சாறரின் மாப்பிள்ளை! பின் ஊரார் மெச்ச திருமணம் நடந்து. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைந்தார் மானக்கஞ்சாறர்.
தவமிருந்து பெற்ற தன் ஒரே செல்வமகளின், அழகிய கூந்தலை ஈசனின் அடியாருக்காய் அரிந்த, மானக்கஞ்சாறரின் திறத்தாலே அவர் வணங்கும் நிலையை எய்தினார்.
"மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்"
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#மானக்கஞ்சாறநாயனார்
#பதினொன்றாம்நாள்

No comments:
Post a Comment