தினம் ஒரு அடியார்-08
ஏனாதி நாத நாயனார்:
விற்போர், முதலான போர்க்கலைகளில் சிறந்த வீரருக்கு ஏனாதி என்று பட்டம் அளிப்பர். ஆகவே இவ்வடியாரின் இயற்பெயர் இதுவல்ல. அவரது வீரம்காரணமாய் காரணப்பெயரே நிலைத்துவிட்டது.
சோழநாட்டின் எயினனூரில் பிறந்தவர் இவர். இவ்வூர் இன்று ஏனநல்லூர் என அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது இவ்வூர்.
[வேழக் கரும்பினோடு மென்
கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி தான்
ஓங்கும் தன்மையதாய்
வாழக் குடி தழைத்து மன்னிய
அப் பொற் பதியில்
ஈழக் குலச் சான்றார்
ஏனாதி நாதனார்]
நாணல் கரும்போடு, மென்கரும்பும் சாயும் வண்ணம் ஓங்கிவளர்ந்த நெற்பயிர் இருக்கும் வயல்கள் மற்று பெருங்குடி மக்கள் வளமுடன் வாழும் இந்நகரில் தோன்றியவர் ஈழக்குலசான்றோர் குலத்தில் தோன்றியவர் ஏனாதிநாதர். வாள்சண்டையில் மிகச்சிறந்தவீரர். ஆகவே தன்னைப்போல பல மாணாக்கர்களை பயிற்றுவித்து வந்தார். ஆயினும் திருநீற்று அடியார் எவரேனும் வந்தால், அவர்களை வணங்கும் உத்தமர். தாம் பயிற்றுவிக்கும் பணியில் கிடைக்கும் ஊதியத்தை கூட சிவனடியார்களின் தேவைக்கு கொடுத்துவிடுபவர். அவரை விரும்பாதவரும், விரும்பும்வண்ணம் நற்சேவைகள் பல புரிந்து வந்தார்.
அவ்வூரிலே அதிசூரன் எனும் மற்றொரு பயிற்றுநர் இருந்தார். சிறந்த வீரர், ஏனாதியின் பயிற்சிகூடத்திற்கே அனைவரும் செல்வதால், தம் தொழில்உரிமை மற்றும் ஊதியம் அனைத்தும் ஏனாதிநாதருக்கே செல்வதை அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இயல்பாகவே அவர்மேல் பகைமை தோன்றியது. ஒருநாள் அப்பகைமை அதிகரித்து தன்உறவினர், சுற்றத்தார், மாணாக்கர்களுடன் ஏனாதியின் இல்லம் நோக்கி சென்று 'வாள் பயிற்றும் தொழிலில் உரிமையுடையவரே' என கோபத்துடன் சப்தமிட்டார்.
[வெங்கட் புலி கிடந்த வெம்
முழையில் சென்று அழைக்கும்
பைங்கண் குறுநரியே போல்வான்
படை கொண்டு
பொங்கிப் புறம் சூழ்ந்து போர்
குறித்து நேர் நின்றே
அங்கட் கடை நின்று அழைத்தான்
ஒலி கேளா]
கொடியகண்ணுடைய புலியின்குகையில் சென்று தன்னுடன் மோதுமாறு குள்ளநரி அழைப்பதாய் இருந்ததென அக்காட்சியை சேக்கிழார் விவரிக்கிறார்.
வெகுண்டெழுந்த ஏனாதியார், 'என்னை போருக்கு அழைத்தவர் யார்?' என வீரக்கழல் அணிந்து, கூர்மையான வாளையும், கேடயத்தையும் கைக்கொண்டு அரிமாவென வெளியேறினார் ஏனாதிநாதர்.
அச்சமயம் ஏனாதிநாதரின் மாணாக்கர் குழுவும்சேர, இருபக்கமும் பெருந்திரளாய் கூட்டம் கூடியது. அப்போது அதிசூரன், 'நம்படையிரண்டும்
மோதிக் கொள்ளட்டும் இதில் எவர் வெல்கிறாரோ, அவருக்கே வாட்கலை பயிற்றுவிக்கு வழிவழியான உரிமையும், வருவாயும் கிடைக்கவேண்டும்' என கூறினார். ஏனாதியும் மறுமொழி கூறாமல் சம்மதித்தார்.
கடும்போர் மூண்டது.இருபக்கமும் கடுமையான சண்டை, மோதிய வாள்களின் சப்தம் வானத்தில் இடிக்கும் இடியைபோல கேட்டது. விற்படை வில்லிகள் செலுத்திய அம்பு ஒவ்வொன்றும் எழுப்பிய ஒலிகள் காற்றை கிழித்தது, அம்புகள்தோய்ந்த தோள்கள் தரையில் வீழ்ந்தன. வீரக்கழல்கள் அறுபட்டன. குருதிப்புனல் பிரவாகமாய் மண்ணில் ஓடியது. வாளால் குத்துவாங்கிய வீரர்களின் சரிந்தகுடலை கழுகுகள் அருகேவந்து பிய்ந்து தின்றுவிட்டு பறந்தது. அக்குடலை ஒருகையால் வயிற்றில் திணித்து, மறுகையால் பகைவனின் இருகாலை வெட்டினான், வெட்டுண்ட வீரனோ விழுவதற்குள் குத்தியவனை கழுத்தில் சொருகினான். இவ்வாறு இறந்தவீரர்பலர். இறந்தவீரர்களின் மலர்ந்த முகம்கண்ட காக்கைககள், அவன் இறக்கவில்லையென கருதி அருகே வட்டமிட்டு கரைந்தது.
[இம் முனைய வெம் போரில்
இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடியபின்
வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர்
பின்னாகத் தாம் முன்பு
தெம்முனையில் ஏனாதி நாதர்
செயிர்த்து எழுந்தார்.]
இக்கொடியபோரில் இருபுறமும் பலர் இறக்க, சினம்கொண்டெழுந்த ஏனாதிநாதர் பெருங்கூச்சலெழுப்பி எஞ்சிய வீரர்களின் தலையை பிளந்தார். தோல்களையும், கைகளையும் ஒருசேர துண்டித்தார் பல இடங்களில் உறுப்புகளற்ற பிண்டம் மட்டுமே மிஞ்சியது. அதிசூரனும் வெறிகொண்டு முன்னே வந்தார்.அப்போது இடம், வலமாய் வாளை பெரும்சுற்றுகளாய் சுற்றினார் ஏனாதியார். எதிரே நிற்பவருக்கு வாளின் ஒளிமட்டுமே தெரியும், அதில் மாட்டினால் உடல் பலதுண்டங்களாய் சிதறுமென்பதையுணர்ந்த அதிசூரன் புறமுதுகிட்டு ஓடினான். அவ்விரவு நீண்டஇரவாய் நீடித்தது. ஒவ்வொரு கனமும் ரணவேதனையால் துடித்தான். நேரம்ஆக, ஆக வெறிஏறியது. வஞ்சகம்செய்தேனும், ஏனாதியை கருவறுக்க உறுதிபூண்டான்.
'நம் பொருட்டாய் வீரர் பலியாக வேணாம், நாமே போரிட்டு முடிவு செய்வோம்' என தூது அனுப்பினான். அதிசூரனின் வஞ்சம் அறியாமல், ஏனாதியும் உடனே சம்மதித்தார். அழகிய பூண்கேடயத்தையும், ஒளிபொருந்திய வாளையும் ஏந்தி தனிமையில் காத்துஇருந்தார் ஏனாதியார்.
[தீங்கு குறித்து அழைத்த
தீயோன் திரு நீறு 1
தாங்கிய நெற்றியினார்
தங்களையே எவ்விடத்தும் 2
ஆங்கு அவரும் தீங்கு
இழையார் என்பது அறிந்தானாய்ப்
பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்]
திருநீறு அணிந்த அடியாருக்கு மனதாலும் தீங்குஅறியான் ஏனாதி, என அறிந்து அதற்குமுன்பு வெண்ணீறை அறியாத அதிசூரன் உடலெங்கும் திருநீறுபூசி வந்தான். ஏனாதிக்கு தான்சொல்லிய இடத்தை வந்தடைந்தான். அங்கேதனிமையில் அமர்ந்திருந்தார் அம்மாவீரர்.
பசியிலிருக்கும் விலங்கினம், தன்முன்னே உணவைகண்ட வெறியில் வருவதைபோல, வெறிகொண்டு அதிசூரனை நோக்கி வாள்சுழற்றி வந்தார் ஏனாதியார். தன்முகத்தை கேடயத்தால் மறைத்துவந்தான் அதிசூரன். ஏனாதியார் அருகே வந்ததும், தன்கேடயத்தை விலக்கினான். அவன்நெற்றியின் மீதிருந்த வெண்ணீற்றை கண்டார் ஏனாதிநாதர்.
[கண்ட பொழுதே கெட்டேன் முன்பு
இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு
மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார்
ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக்
குறி வழி நிற்பேன் என்று]
கண்டவுடன் ஆ!கெட்டேன். இவர் நெற்றியின் மீது வெண்ணீறு கண்டேன். இவர் எம் ஈசனின் அடியாராகவே காண்பேன். இவரது குறிப்பின் வழியே நடப்பேன், என கேடயத்தையும் வாளினையும் கீழேபோட்டார் அந்த சிவப்பழம். நிராயுதபாணியாகிய ஏனாதிநாதனை கொன்றழித்தது அந்த மிருகம். சேக்கிழார் இக்கொலைபாதகத்தை விவரிக்கவில்லையெனினும், எவ்வாறு நடந்திருக்கும் என யூகித்தால் கொடூரமான துரோகநிகழ்வாகவே இருந்திருக்கும். சிரம் தாழ்ந்து வணங்கிய அந்த சுத்தவீரனின் தலையை ஒரே வீச்சில் கொன்றிருப்பானோ? அல்லது இத்தனை வருட வஞ்சனையை தீர்க்க, நவகண்டம் போல ஒவ்வொரு உறுப்பாய் அரிந்தானோ!
எப்படியோ! எவராலும் வெல்லஇயலா சுத்தவீரனை சிவபக்தியால் வஞ்சித்து கொன்றதால் அவ்வீரனின் புகழ்மெல்ல பரவி சுந்தரர் காதுகளுக்கு எட்டி சேக்கிழார் மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
ஏனாதிநாதருக்கு தானேமுன்வந்து காட்சியளித்தார் ஈசர்.இனிதே சிவபதம் அடைந்தார் ஏனாதிநாதர்.
"ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்"
சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#ஏனாதிநாதநாயனர்
#எட்டாம்நாள்

No comments:
Post a Comment