காரிநாயனார்:
வேத அந்தணர் மிகுந்து வாழும் திருக்கடவூரில் அந்தணர் குடியில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: மாசி பூராடம்
வண்மையான தமிழ்மொழியின் நுட்பத்தினை அறிந்து அதன் சொற், பொருட் சுவைதனை முழுவதும் உணர்ந்து, அச்சொற்களை இணைத்து தம்பெயரால் "காரிக்கோவை" எனும் நூலினை இயற்றி அதனை மூவேந்தர்களிடமும் சென்று படைத்துக் காட்டுவார்.
"குறையாத தமிழ்க்கோவை தம் பெயராற் குலவும் வகை முறையாலே
தொகுத்தமைத்து"
என்று இவர்குறித்து சேக்கிழார் பாடுவதனால்,காரிக்கோவை
என்றதோர் அகப்பொருட்டுறைக்
கோவை நூல் இவரால் செய்யப்பட்டதென்று தெரிகிறது. இந்நூலைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை, அவ்வாறு கிடைத்திருப்பின் தமிழ்த்தாயின் அணிகலன்களில் மேலும் ஒன்று கூடியிருக்கும், இவர் சம்பந்தர் காலத்திற்கும், சுந்தரர் காலத்திற்கு முன்பாக இடைபட்ட அடியார், இவரது காலம்(650-800)
தம் தமிழ்ப்புலமையினால் மூவேந்தரின் வண்மையை தனித்தனியே பாடி, அளவில்லாத செல்வங்களை பரிசிலாய் கொண்டு, தம் சொந்த பொருட்செலவில் ஈசன்உறையும் கோவில்கள் பலவற்றை கட்டினார். மேலும் தம்செல்வங்களை கொண்டு சிவனடியார்களுக்கு வேண்டுவன அளித்து திருத்தொண்டு ஆற்றி வந்தார்.
கடல்சூழ்ந்த இவ்வுலகில் கோவில் எடுத்தல், அடியார்தம் வேண்டுவன செய்தல் போன்ற நற்காரியங்களை செய்துவந்த காரிநாயனார். நாள்தோறும் சிவபெருமான் உறையும் கயிலை மலையை நினைத்து, தம் பூதவுடலோடு கயிலையை அடைந்தார்.
“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#காரிநாயனார்
#நாற்பத்துஏழாம்நாள்
No comments:
Post a Comment