தினம் ஒரு அடிகள்-27
நமிநந்தியடிகள்:
சோழநாட்டின் ஏமப்பேரூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: வைகாசி பூசம்
ஏமப்பேரூர் இன்று திருநெய்ப்பேர் என அழைக்கப்படுகிறது!
திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் சரியாக 8 கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.
இம்மையிலும் மறுமையிலும் சிவன் திருவடிகளையே மெய்ப்பொருளாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.
நான்கு வேதங்களில் மூன்றாவதாக கருதப்படும் சாம வேதம் இசை வடிவமாகவே இருக்கிறது. இறைவனான திருமால் பகவத் கீதையில் தன்னை சாம கீதமாக இருப்பவனாக குறிப்பிடுகிறார். சிவபெருமானும் சாமகீதப் பிரியன் என்று போற்றப் படுகிறார்.சாம வேதத்தை ஆறு வகையான சந்த வகைகளில் பாராயணம் செய்கிறார்கள். சோமபானம் தயாரிக்கும்போது இவ்வேத மந்திரம் ஒலிக்க வேண்டும் என்பது இதன் நெறி. சோமபானம் அன்று தெய்வங்களுக்கு படைக்கும் புனிதபானமாய் கருதப்பட்டது. ஆகவே ஆனந்தவேளையில் சாமசங்கீதம் வாசிக்கப்பட்டது. இன்றும் கூட சிறுதெய்வ வழிபாட்டில் மது பிரதானமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சாமவேதம் ஓதி, இறைவன் திருவடியை தினமும் போற்றுவார் நமிநந்தி. ஒருநாள் பழம்பதியான திருவாரூர் வந்தடைந்தார். ஈசனின் மேன்மையான அருளைக் கண்டதால் இனி வாழ்நாள் முழுவதும் திருவாரூரிலேயே கழிக்க எண்ணினார். மாலைநேரம் வந்துவிட்டது, ஈசருக்கு காலம்தாழ்த்தாது விளக்கெரீக்க வேண்டுமென விரைந்து நெய் வாங்க சென்றார். அருகே சமணர் வீடு ஒன்று இருந்தது. அவசரம் கருதி உள்ளே சென்று நெய் கேட்டார். அந்த சமணர் அதற்கு, "நெய் இல்லை அப்படி விளக்கு ஏற்றித்தான் வேண்டுமெனில் தண்ணீர் ஊற்றி ஏற்றுங்கள்" என பரிகசித்தார்.
மனமுடைந்த நமிநந்தி வருத்தம் மேலிட ஈசன் திருவடி பணிந்தார். அச்சமயம் வானில் அசரீரி ஒலித்தது.
[வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்]
"கமலாலயக் குளத்தின் நீரைக் கொண்டு விளக்கெரிப்பாயாக" என குரல் கேட்க அவ்வாறே செய்தார், விளக்கு சுடர்விட்டு எரிய, ஆனந்தகூத்தாடி, அனைத்து விளக்குககளையும் அவ்வாறே ஏற்றினார். பொழுதுபுலரும் வரை விளக்கு அணையாமல் எரிந்தது.அன்று இரவே ஏமபேரூருக்கு சென்றார். தினமும் காலை முதல் மாலை வரை ஏமப்பேரூர் இறைவனுக்கு திருவமுது படைத்துவிட்டு தினமும் திருவாரூருக்கு மாலைப்பொழுதில் விளக்கேற்றும் பணியை செய்தார்( கிட்டத்தட்ட 16கி.மீ தினமும் நடந்தே சென்று வந்தார்) நமிநந்தியடிகளின் தண்ணீரில் விளக்கேறும் விந்தையான செய்தி ஊரெங்கும் பரவியதால் கலக்கமடைந்த சமணர்கள் அவ்வூரை காலிசெய்து ஓட்டமெடுத்தனர். மெல்ல இச்செய்தி சோழமன்னனுக்கும் பரவ இறைவனின் திருவமுதுக்கான நிவந்தங்கள் இடையூறில்லாது தொடர்ந்து கிடைக்க உத்தரவிட்டான். மேலும் பங்குனி உத்திர நாளன்று இறைவனுக்கு திருவிழா நடத்த அனுமதி வாங்கினார் நமிநந்தி.
திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் திருமணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கக் காட்சி கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப் பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிரவில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அவரது மனைவியார், உள்ளே வருமாறு அழைக்க, திருமணலிக்கு சென்றபோது அனைத்து குல மக்களுடன் கூட்டத்தில் இருந்ததால் எனக்கு தீட்டு ஏற்ப்பட்டுவிட்டது என்றார்(அக்காலத்தில் தீண்டாமை எந்தளவு இருந்தது என்பதை இக்காட்சி விளக்கும்) ஆகவே குளிர்ந்த நீராடி, பூஜைசெய்ய வேண்டும், அதற்கான ஏற்பாட்டினை செய்! என மனைவியை துரிதப்படுத்தினார். அவர் அவ்வாறு செய்யும் முன்பே உறக்கம் தள்ளியது நமிநந்திக்கு. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார்.
தன்தவறை உணர்ந்த நமிநந்தி உறக்கம் கலைந்து, நடந்ததை தம் மனைவியிடம் கூறி விடியற்பொழுதில் விரைந்து திருவாரூர் சென்றிர்.வழியில் தென்பட்ட திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசொரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார்.
இந்நிலையில் சிவகனமாய் தோன்றிய அனைவரும் முந்தைய வடிவம் பெற்றனர். பின் இறைவன் திருவருளாலே தன் ஊரை விடுத்து, திருவாரூர் வந்தடைந்து முன்போலவே பல திருத்தொண்டுகள் புரிந்து வந்தார். இதனாலேயே திருநாவுக்கரசரால் ‘தொண்டர்க்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப்பட்டார் இவ்வாறு பலகாலம் எல்லா உலகங்களும் தொழ திருப்பணிகள் செய்து திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.
“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#நமிநந்தியடிகள்
#இருபத்தேழாம்நாள்

No comments:
Post a Comment