தினம் ஒரு அடியார்-02
இயற்பகையார்:
"செக்கர் வெண்பிறைச் சடையவ ரடிமைத்
திறத்தின் மிக்கவர் மறைச்சிலம் படியார்
மிக்க சீரடி யார்கள்யா ரெனினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்க டற்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்" (பெ.பு:405)
இப்பாடல் பெரியபுராணத்தில் இயற்பகையாரின் சிறப்பைகுறித்து வரும்பாடல், இவர் முதன்மையான வணிகக்குடியில் பிறந்தவர். சோழவளநாட்டின் துறைமுகநகரான புகார்நகரிலே பிறந்தவர். அளவில்லா வளங்கள் உடையவர்.
பூசை நாள்:மார்கழி உத்திரம்
அவதாரத் தலம்:பல்லவனீச்சரம்
முக்தித் தலம்:சாய்க்காடு
பிறைசந்திரனை சூடிய சிவபெருமானுக்கு தொண்டாற்றுவதில் வல்லவர். சிவனடியார்கள் கேட்கும் எதனையும் இல்லையென சொல்லாது கடற்போல் அளிக்கும் வல்லமையுடையவர்.
இப்பெயர் அவரது இயற்பெயராய் இருப்பதற்கு வாய்ப்பில்லை,ஈசன்மேல் கொண்ட அதீத அன்பினால் இயற்கைக்கு முரணான காரணத்தினை செய்ததனால் இக்காரண பெயர் இவருக்கு வந்ததாக கருதப்படுகிறது!
“இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது. இதிலிருந்தே இவரது கொடைத்தன்மையை எளிதில் விளங்கலாம்.
இவரது இம்முரணான செயல்களாலேயே இவர் வணங்கும் நிலமைக்கு உயர்த்தப்படுகிறார்.
இவரது கொடைத்தன்மையையும், பக்தியையும் சோதிக்க விரும்பிய ஈசர், காமுகவேதியர் வேடம்பூண்டு இயற்பகையார் இல்லம் நோக்கி விரைகிறார்,வழக்கம்போல இயற்பகையார் வரவேற்றார்.
”சிவனடியார்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் உன் இயல்பினை அறிந்து தான் யாம் விரும்பும் ஒரு பொருளை உன்னிடம் கேட்டுப் பெறுவதற்காக உன் இல்லத்திற்கு வந்துள்ளோம். யாம் கேட்கும் பொருளை நீர் கொடுப்பதாக இருந்தால் கூறுகிறோம்” என்று ஒரு நீண்ட பீடிகையுடன் வந்த அடியவர் பேசலானார்.
“நீங்கள் கேட்கும் பொருள் என்னிடத்தில் இருக்குமானால் அது எதுவாயினும் எம்பிரான் அடியவருக்கே உடைமையான பொருளாகும்,” என்று இயற்பகையார் பதிலளித்தார்.காமுகன் வேடத்தில் வந்த அடியார் சிறிதளவும் கூச்சப்படாமல், “உன் காதல் மனைவியைப் பெறுவதற்காகத்தான் யாம் இங்கு வந்தோம்,” என்று கூறினார். அதைக் கேட்ட இயற்பகையார் வியப்போ அதிர்ச்சியோ அடையவில்லை. மகிழ்ச்சியே அடைந்தார். ” என்னிடம் இருக்கும் பொருளையே தாங்கள் விரும்பி கேட்டது எம்பிரான் எனக்களித்த பேறு.” என்று கூறி
மனைவியை தாரைவார்த்தார் இயற்பகையார். அகமகிழ்ந்த அடியார்,
”இந்த பெண்ணை நான் தனியே கூட்டிச் சென்றால் உன்மேல் அன்பு கொண்ட உன் சுற்றத்தார் அனைவரும் என்னை சும்மா விடுவார்களா? எனவே ஊர் எல்லை வரை நீ எமக்குத் துணையாக வர வேண்டும்” என்று கூறினார். அதுவும் சரியே என்று கருதிய இயற்பகையார், வாளோடு முனிவர் பின் துணையாகச் சென்றார்.
இயற்பகை நாயனாரின் செயலை கேள்வியுற்ற சுற்றத்தார்கள் இவர் பித்தன் ஆகிவிட்டார், இவரால் நமக்கு வரக்கூடிய பழியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வில்லும் வாளும் ஏந்தி ஒன்றுகூடினர். அடியாரையும் போக விடாமல் தடுத்தனர். கோபம்கொண்ட இயற்பகையார், முன்னே சென்று ஆண் புலியை போல உறவினர்களின் கை கால்களை வெட்டி வீழ்த்தினார். அச்சமயம் இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் தப்பியோடிவிட்டனர்.
(சொரிந்தன குடல்கள் எங்கும்;
துணிந்தன உடல்கள் எங்கும்;
விரிந்தன தலைகள் எங்கும்;மிடைந்தன கழுகும் எங்கும்; எரிந்தன விழிகள் எங்கும்; எதிர்ப்பவர் ஒருவர்இன்றித்
திரிந்தனர் களனில் எங்கும் சிவன்கழல் புனைந்த வீரர்-பெ.பு:426)
பிறகு மூவரும் ஒருவர் பின் ஒருவராக திருச்சாய்க்காடு என்னும் தலத்து அருகே வந்து சேர்ந்தனர். அங்கு வந்தவுடன், வேதியராக வந்த அடியவர் இயற்பகையாரைப் பார்த்து, நீவீர் உன் இல்லம் செல்லலாம் என்று கூறினார். நாயனாரும் அடியவரின் மலர் பாதங்களில் விழுந்து வணங்கி, பிறகு தம் இல்லத்தை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அடியார் இடமிருந்து ஓலம் ஓலம், அதாவது அபயம் அபயம் என்ற கூக்குரல் வரக் கேட்டார். மீண்டும் அடியாருக்கு ஏதோ ஆபத்து என்று வாளை உருவி திரும்ப அடியார் பக்கம் ஓடினார். ஓடோடி வந்த நாயனார் அங்கு அடியவரை காணாமல் அம்மையை மட்டும் கண்டார். அங்கு வானில் உமையவள் உடன் இறைவன் இடப வாகனத்தில் காட்சியளிப்பதைக் கண்ணுற்று நிலத்திலே பலமுறை விழுந்து விழுந்து வணங்கினார்.
வானவர்கள் பூ மழை பொழிய, வேதங்கள் முழங்க, ஞானத்தில் சிறந்த முனிவர்கள் போற்ற, ஊனம் இல்லாத சேவையில் சிறந்த இயற்பகை நாயனார், சிவபெருமான் இருக்கும் தேவ லோகத்தில் தம் இல்லத்தரசி யுடன் சேர்ந்து வாழும் பேற்றினைப் பெற்றார். அவருடன் போரிட்டு இறந்த சுற்றத்தார் அனைவரும் வானுலகத்தில் சொர்க்க நிலையை எய்தினர்.
புகைப்படம் உதவி: திரு.Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#இயற்பகைநாயனார்
#இரண்டாம்அடியார்
#அறுபத்துமூவர்
#தினம்ஒருடியார்

No comments:
Post a Comment